பொடுகு பிரச்சனையா? தீர்க்க சிறந்த வழிமுறைகள் இதோ..!

பொடுகு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. தலையில் ஏற்படும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று.

அளவுக்கு அதிகமாக இறந்த செல்கள் இருப்பதால் பொடுகு பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பொடுகு இருந்தால் முடி கொட்டுதல், முகப்பரு, நரைமுடி, தோல் பிரச்சனை போன்றவை ஏற்படும்.

  1. வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அரைத்து தயிருடன் கலந்து ஸ்கல்ப்பில் படும்படி தேய்த்து , மைல்டு ஷாம்பு
    போட்டு அலச வேண்டும்.
  2. 1 கப் தயிருடன் 2 டீஸ்பூன் வால் மிளகுத்தூளை சேர்த்து நன்கு கலந்து, தலையி தடவி ஊற வைத்து முடியை அலச வேண்டும். இவ்வாறு
    தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு படிபடியாக நீங்கிவிடும்.
  3. ஆலிவ் ஆயிலை லேசாக சூடேற்றி, இரவில் தேய்த்து விட்டு காலையில் எழுந்து ஷாம்பு போட்டு தலையை அலச வேண்டும்.
  4. ஷாப்பு பயன்படுத்துவதற்கு பதில் தொடர்ந்து சீயக்காய் பயன்படுத்துவதால் கூட பொடுகு குறையும். சீயக்காய் தலையை வறண்டு போகாமல் பாது காக்கும்.
  5. ஸ்கல்ப்பில் உள்ள தோல் செதில் செதிலாக வருவதை தடுக்கும். அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் பூண்டின் பற்களை அரைத்து கலந்து, ஸ்க்ல்ப்பில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து பின் ஷாம்பு சேர்த்து குளிக்க வேண்டும்.
  6. சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் ஊற வைத்து, 30 நிமிடம் கழித்து குளித்தால் தலையில் உள்ள பொடுகு முற்ரீலும் போய்விடும்.
  7. வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை லேசாக சூடேற்றி, தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தீரும்.

ஒருவர் பயன்படுத்திய சீப்பை மற்றொருவர் பயன்படுத்தும்போதும் பொடுகு வர வாய்ப்புகள் அதிகம்.

Source: webdunia