அல்சர் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவு முறைகள்….!

அல்சர் இருப்பவர்கள் தினமும் சாதத்தில் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் வயிற்று புண் ஆறிவிடும்.

தினமும் காலையில் வீட்டில் செய்த ஆப்பிள் சார் கொடுத்து வந்தால் கடுமையான வலி குறையும் அதிகாலையில் எழுந்து தண்ணீர் குடித்த பின் வேப்ப இலை சாப்பிட்டால் அல்சர் மட்டுமல்லாமல் வயிற்றில் உள்ள எல்லா வலி தீர்ந்துவிடும் தினமும் உணவில்

முட்டைகோஸ் சேர்த்து வந்தால் விரைவில் அல்சர் குணமாகும்

அல்சருக்கு அகத்திக்கீரை நல்லது .தினமும் ஒரு கிண்ணம் அகத்திக் கீரையை அரைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது அல்சரில் இருந்து சீக்கிரம் விடுபட உதவும்உங்களுக்கு அல்சர் பெரும் வலி ஏற்பட்டால் பச்சை பெருங்காயத்தை உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும் இதன் மூலம் வயிற்றில் ஏற்படும் கடுமையான வலி குறையும்

பீட்ரூட் அல்சருக்கு நல்லது பீட்ரூட்டை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும் பாகற்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நல்லது மற்றும் பாகற்காயை துண்டுகளாக வெட்டி காயவைத்து பொடி செய்து வந்தால் முற்றிலும் குணமாகும் .

தினமும்அவர்க்காய் பொடியை ஒரு ஸ்பூன் வெந்நீரில்சாப்பிட்டு வந்தால் அல்சரிலிருந்து விடுபடலாம் பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் அல்சருக்கு நல்லது மற்றும் நெல்லிக்காய் சாறில் தயிர் சேர்த்து கலந்து குடிப்பது நல்லது.

காய்கறி வகைகள் கூட உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் பழங்கள் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் அல்சரை குணப்படுத்த சில பழங்கள்வகைகளை கூறுகிறேன் முயற்சி செய்து பாருங்கள்.

மாதுளை பழம் சாப்பிடலாம் அதைவிட காயாக இருக்கும்போது அதை எடுத்து கழுவி அப்படியே மென்று சாப்பிட வேண்டும் முக்கியமாக வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை சாப்பிட்டு வந்தால் உடல் சம்பந்தமான புண்கள் வெகு விரைவில் குறையும் மாதிரி பழத்தை அரைத்து ஜூஸாக சாப்பிடலாம் வெறும் வயிற்றில் மாதுளை ஜூஸ் குடித்தாள் அல்சரைக் குணப்படுத்தலாம்

சப்போட்டா பழம்

சப்போட்டா பழம் ஒரு கொடிய புண்களை ஆற்றக் கூடிய சக்தி கொண்டது இதை காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையில் எடுத்துக்கொள்ளலாம் அல்சர் இருப்பவர்களுக்கு நடுராத்திரியில் வலி ஏற்படும் மற்றும் பசி ஏற்படும் அந்த மாதிரி சூழ்நிலையில் சப்போட்டா பழம் ஒரு நல்ல மருந்தாக இருக்கும் ஒரே ஒரு சப்போட்டா பழம் சாப்பிட்டாலே உங்கள் வலிகள் தீரும்

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம் ஒரு நாளைக்கு 2 தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் வயிறு எரிச்சல் கட்டுப்பாடாக இருக்கும்

வாழைப்பழம்

அல்சர் உடனே பாதிக்காமலிருக்க மிகவும் உதவுகிறது

லெமன் ஜூஸ் அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட கூடாது என சொல்லுவார்கள் ஆனால் லெமன் ஜூஸ் அதில் சிறிது தேனை கலந்து சாப்பாட்டுக்குப் பின் தினமும் சாப்பிட்டு வந்தால் அல்சர் மிக விரைவில் குறையும்

விதையில்லா திராட்சை

ஒரு கைப்பிடி அளவு உணவுக்கு பின் அல்லது உணவுக்கு முன் சாப்பிட்டால் அல்சரிலிருந்து மிக விரைவில் விடுபடலாம்.

உங்களுக்கு திராட்சைப் பழத்தை சாப்பிட முடியவில்லை என்றால் திராட்சைப் பழத்தை சிறிது பால் சேர்த்து ஜூஸ் ஆக குடிக்கலாம் அல்சர் விரைவில் குணமாகும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!