எப்போதும் முகக்கவசம் அணியும் போது இதை மறக்காதீங்க…!


முகக்கவசங்கள் முகத்திற்கு பொருத்தமாக இருக்க வேண்டியதும் அவசியம். சரியாக பொருந்தாவிட்டால் அதனை அணிவது பயனற்று போய்விடும்.

கொரோனா நோய் தொற்றுவில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவியதால் நிறைய பேர் வீட்டிலேயே முகக்கவசங்களை தயாரித்து அணிந்து வருகிறார்கள். வீட்டில் தயாரிக்கப்படும் முகக்கவசங்கள்தான் தனிமனித சுகாதாரத்தை பேணுவதற்கு சிறந்தது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் கூறியுள்ளது.

ஒருமுறை பயன்படுத்திய முகக்கவசங்களை நன்றாக சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் தயாரிப்பதும் சிறந்தது. அந்த முகக்கவசங்கள் முகத்திற்கு பொருத்தமாக இருக்க வேண்டியதும் அவசியம். சரியாக பொருந்தாவிட்டால் அதனை அணிவது பயனற்று போய்விடும்.

முகக்கவசங்களை அணியும்போது தாடைப்பகுதி முழுவதும் மூடியிருக்க வேண்டும். தளர்வாக இருக்கக்கூடாது. மூக்கு பகுதியையும் முழுவதுமாக மூகக்கவசம் மூடி இருக்க வேண்டும். மூக்குக்கு கீழே தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது. மூக்கின் நுனிப்பகுதியை மட்டும் மறைத்திருக்கவும் கூடாது. மூக்கு பகுதியும், தாடை பகுதியும் முழுவதுமாக மூடி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

முகக்கவசத்தின் எந்த பகுதியும் தளர்வாக இருக்கக்கூடாது. முகத்தின் அனைத்து பகுதியையும் இறுக்கமாக மூடி இருக்க வேண்டும். முகக்கவசத்தை அடிக்கடி கைகளை கொண்டு தொடக்கூடாது. அடிக்கடி கழற்றி மாட்டிக்கொண்டிருக்கவும் கூடாது. முகக்கவசத்தை கழற்றியதும் சோப்பு கொண்டு 20 விநாடிகள் கைகளை கழுவ வேண்டியது அவசியம். ஒரு அடுக்கு கொண்ட முகக்கவசங்களை மீண்டும் உபயோகிக்கக்கூடாது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!