மும்பை தம்பதியின் போதைப்பொருள் கடத்தல் வழக்கு – கத்தார் கோர்ட்டு திடீர் உத்தரவு


போதைப்பொருள் கடத்தலில் தண்டனை விதிக்கப்பட்ட மும்பை தம்பதியின் வழக்கை மீண்டும் விசாரிக்க கத்தார் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பையை சோ்ந்தவர் முகமது சாரிக்(வயது30). இவரது மனைவி ஒனிபா. இவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் கத்தாருக்கு சென்றனர். இதில் தோகா விமான நிலையத்தில் தம்பதியிடம் இருந்து 4.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கடந்த மாதம் கத்தார் கோர்ட்டு அவர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.

இந்தநிலையில் கர்ப்பமாக இருந்த ஒனிபாவுக்கு ஜெயிலில் வைத்து பெண் குழந்தை பிறந்தது.

மீண்டும் விசாரிக்க உத்தரவு
இதற்கிடையே தம்பதியினர் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கத்தார் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில் அவா்கள், தனது அத்தை புகையிலை என கூறி நண்பர் ஒருவருக்கு கஞ்சாவை கொடுத்து அனுப்பியதாக கூறினர். மேலும் கஞ்சா என்று தொியாமல் அதை தாங்கள் எடுத்து வந்ததாகவும் கூறியிருந்தனர்.

இதேபோல தங்களின் மீது இதற்கு முன் எந்த குற்றப்பின்னணியும் கிடையாது என்ற தகவலையும் தம்பதி தொிவித்து இருந்தனர். இதையடுத்து மனுவை விசாரித்த கத்தார் உச்சநீதிமன்றம் தம்பதிக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தது. மேலும் அந்த வழக்கின் மேல்முறையீடு மனுவை புதிய அமர்வுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இந்த வழக்கை மீண்டும் விசாாிக்க உத்தரவிட்டனர்.- source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!