ஒயின் குடித்தால் ஏன் உடற்பயிற்சி செய்ய சொல்லுகிறார்கள் தெரியுமா..?


ரெட் ஒயினை குறைந்த அளவு சாப்பிட்டால் இதயத்திற்கு எந்த நோயும் வராமல் தடுப்பதோடு, உடலும் இளமையோடு அழகாக காணப்படும்.

ஏனெனில் இந்த பானத்தில் இருக்கும் ஆன்டி-ஏஜிங் பொருள் தான் இளமைத் தோற்றத்தை தருவதோடு வாழ்நாளையும் அதிகரிக்கிறது என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ஒயின் குடித்தால் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் கிடைக்கும் பலன்களுக்கு இணையான பலன்கள் கிடைக்கும் என்று கனடாவில் உள்ள அல்பெர்ட்டா பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் ஜேசன் டைக் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக சாதாரணமாக உள்ளது.

பெருநகரங்களில் வாழும் பெரும்பாலான பெண்களும் தற்போது ஒயின் அருந்துகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும் ஒயின் குடிப்பதால் தோலின் நிறம் கூடும், தோல் மென்மையாக மாறும், மற்றும் உடலுக்கு நல்லது என்று கூறி பல நபர்கள் ஒயின் அருந்துவதை நாம் பார்த்திருப்போம்.


இந்த ஒயினில், ரெஸ்வரட்ரால் என்ற ஆன்டி ஆக்சிடண்ட் உள்ளதாம். இந்த ஆன்டி ஆக்சிடண்ட், தசையை வலிமைப்படுத்துவதாகவும், இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இவையெல்லாம், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால், கிடைக்கும் நன்மைகள் ஆகும்.

எனவே, உடற்பயிற்சி செய்ய இயலாதவர்கள், ஒயின் குடித்தால் அதே பலன்கள் கிடைக்கும் என்று ஜேசன் டைக் சிபாரிசு செய்கிறார். ஆய்வுக்கூடத்தில், விலங்குகளை வைத்து இவர் பரிசோதனை நடத்தி, இந்த முடிவுக்கு வந்துள்ளார்.

ரெஸ்வரட்ரால் ஆன்டி ஆக்சிடண்ட், கண்புரை, புற்றுநோய் ஆகியவைக்கான வாய்ப்பை குறைப்பதாகவும், ஞாபகசக்தியை வளர்ப்பதாகவும் முந்தைய ஆராய்ச்சி கூறுகிறது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!