பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா? இதோ சூப்பர் டிப்ஸ்..!


நகங்களை நன்கு வளரச் செய்ய வேண்டுமானால் நீங்கள் உங்களுடைய உடம்பில் உள்ள ‘கொலாஜன்’ என்ற புரோட்டின் சத்தினை அதிகரிக்க வேண்டும். சராசரியாக உங்கள் நகங்கள் ஒரு மாதத்தில் ஒரு இன்ச் அளவில் பத்தில் ஒரு பங்கு வளரும்.

ஆனால் அதன் வளர்ச்சி ஒவ்வொறு மனிதருக்கும் வேறுபடும். ஹார்மோன் குறைபாடு, சத்து குறைபாடு மற்றும் மருந்துகள் போன்றவற்றால் நக வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

நகங்களை பாதுகாக்க வேண்டுமானால் நல்ல உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தோலின் தன்மையை வைத்து நகங்களின் சிறப்பை அறியலாம். வீட்டிலேயே ஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வளரச் செய்யும் யுக்திகளை இங்கு காணலாம்.

எலுமிச்சையுடன் சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் நகங்களின் சாயத்தன்மையை பாதுகாக்கும். தேங்காய் எண்ணையில் உள்ள ‘லாரிக் அமிலம்’ புறத்தோலின் தன்மையை உறுதியாக்கும் . ஒரு தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணையுடன் 5 சொட்டு லெமன் சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். ‘மைக்ரோவேவ் ‘ அடுப்பில் 20 நொடிகள் அதனை கொதிக்க வைக்க வேண்டும்.

உங்கள் நகங்களை அதில் பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் நன்கு மசாஜ் செய்து விட வேண்டும். இதனை தினமும் ஒருமுறை பின்பற்ற வேண்டும்.

ஆரஞ்சு சாறு: ஆரஞ்சு சாற்றில் உள்ள ‘போலிக்’ அமிலமும் வைட்டமின் – சி வகையும் நகங்களின் வளர்ச்சிக்கு உதவும். உங்கள் நகங்களை 5 நிமிடத்திற்கு ஆரஞ்சு சாற்றில் நனைத்து பின்னர் கழுவி விடவும். பின்னர் நகங்களை உலர வைத்து விடவும்.

பூண்டு : பூண்டில் உள்ள சல்பர் சத்து நகங்கள் நொறுங்காமல் நன்கு வளர உதவுகிறது. ஒரு கப் தண்ணீரில் நன்கு மசித்த பூண்டும் ஒரு தேக்கரண்டி லெமன் சாறும் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அது நன்கு ஆறிய பின் அதனை ஒரு நகப்பூச்சு பாட்டிலில் ஊற்றி நகங்களில் தினமும் இரவு தூங்கும் முன் தேய்க்க வேண்டும்.


ஆலிவ் எண்ணைய் : ஆலிவ் எண்ணையில் உள்ள வைட்டமின் ஈ இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி நகங்களை நன்கு வளரச் செய்யும். இரவு தூங்கும் முன் உங்களுடைய நகங்களையும் புறத்தோல் பகுதிகளையும் சூடான ஆலிவ் எண்ணையைக் கொண்டு தேய்த்து கொள்ளவும். இதனை தினமும் கடைபிடிக்க வேண்டும்.

தேங்காய் எண்ணை மற்றும் தேன்: தேங்காய் எண்ணையில் உள்ள ‘லாரிக்” அமிலமும் தேனில் உள்ள ‘அமினோ” அமிலமும் நகங்களின் பளபளப்பிற்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இந்த இரண்டு பொருட்களையும் கலந்து நகங்களின் மேல் 5 நிமிடம் தேய்க்க வேண்டும். சுமார் 15 நிமிடம் கழித்து அதனை கழுவி உலரச் செய்ய வேண்டும். இதனை வாரம் இருமுறை கடைபிடிக்க வேண்டும்.

ஆரஞ்சு சாறு, பூண்டு மற்றும் ஆலிவ் எண்ணைய்: ஒரு தேக்கரண்டி ஆரஞ்சு சாறு, 3 சொட்டு பூண்டு சாறு மற்றும் 5 சொட்டு ஆலிவ் எண்ணையைக் கலந்து நகங்களில் தடவ வேண்டும். பின்னர் அதனை தண்ணீரில் கழுவி விடவேண்டும். இதனை தினமும் செய்ய வேண்டும்

கல் உப்பு: கல் உப்பில் உள்ள 20 மினரல்கள் நகங்களின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். கொதிக்க வைத்த நீரில் 1 தேக்கரண்டி கல் உப்பினையும் 3 சொட்டு ரோஸ்மேரி எண்ணையையும் கலந்து கொள்ளவும். உங்கள் நகங்களை அதில் 10 நிமிடம் ஊற வைத்துப் பின்னர் உலர்த்தி விடவும். இதனை வாரத்தில் 3 முறை செய்யவும்.

வைட்டமின் ஈ எண்ணைய்: வைட்டமின் ஈ சத்து நகங்களுக்குப் புது உணர்ச்சியையும் அழகையும் கொடுக்கும். இரண்டு வைட்டமின்-ஈ கேப்சியூல்களை எடுத்து அதில் உள்ள களிம்பைப் பிதிக்கி எடுத்துக் கொள்ளவேண்டும். அதனுடன் இரண்டு சொட்டு லாவண்டர் எண்ணையைக் கலந்து கொள்ள வேண்டும். இதனை நகங்களுக்குப் பூசினால் காலையில் அவை பளபளப்பாகவும் உறுதியாகவும் தென்படும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!