மலச்சிக்கல் ,அஜீரணம் பிரச்சனையை தீர்க்கும் ஆசனம்..!


தனூராசனம் செய்யும் போது வயிற்று தசைகளுக்கு போதிய அழுத்தம் கிடைப்பதால் வயிற்று உள் உறுப்புகள் பலன் பெறுகின்றது. அஜீரணம், உணவு செரியாமை, மலச்சிக்கலால் நீண்ட காலம் அவதிப்பட்டவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்கின்றது.

விரிப்பில் கிழக்கு நோக்கி குப்புறப் படுத்துக்கொள்ளவும் . இருகால் பாதங்களை முதுகை நோக்கி கொண்டு வந்து கைகளை பின்னால் கொண்டு வந்து, கைகளால் காலின் கணுக்கால் பகுதியை இறுக்கமாக பற்றி பிடிக்கவும். தலை, மார்பு, கால்கள் ஒரு சேர உயர்த்தி மூச்சை உள் இழுத்து தூக்கவும். அடிவயிறு மட்டும் விரிப்பின் மீது இருக்க வேண்டும் . மூச்சை அடக்கி 15 விநாடிகள் இருக்கவும். பின் கைகளை பிரித்து கால்களை நீட்டவும். சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் செய்யவும். மூன்று முறைகள் தினமும் செய்யவும்.

முக்கிய குறிப்பு

கல்லீரல் வீக்கம், வயிற்று புண் உள்ளவர்கள் இவ்வாசனத்தை செய்யக்கூடாது. பெண்கள் கருவுற்ற சமயம் செய்யக்கூடாது. இதய பலவீனம், இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் செய்யக்கூடாது.

பொதுவான பலன்கள்:

வயிற்று தசைகளுக்கு போதிய அழுத்தம் கிடைப்பதால் வயிற்று உள் உறுப்புகள் பலன் பெறுகின்றது. அஜீரணம், உணவு செரியாமை, மலச்சிக்கலால் நீண்ட காலம் அவதிப்பட்டவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்கின்றது. உடல் எடை, தொப்பைக் குறையும். வயிற்றுப் பொருமல், உப்புசம், வாயுக் கோளாறுகள் குணமடையும்.
முதுகுத்தண்டு பலப்படும்.

நுரையீரல் பலப்படும். ஆஸ்துமா நோயைக் குணப்படுத்தும். நீரிழிவு நோயை குணப்படுத்தும். கணையம் ஒழுங்காக இன்சுலினை சுரக்கச் செய்யும். கூன்முதுகை நிமிர்த்துகின்றது. இரத்த ஒட்டம் சிறப்பாக செயல்படும். பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் ஏற்படும் பெருத்த வயிற்றை குறைக்கும். ழூமாதவிடாய் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.

மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகமாகும். சோம்பல் நீங்கும். அடிக்கடி கோபப்படும் குணத்தை மாற்றிவிடும். ஒரு ஆசனத்தில் எவ்வளவு பலன்கள் பார்த்தீர்களா? தனூர் என்றால் வில். உடலை வில்போல் வளைத்தல். சிறுகுடல், பெருங் குடல், கணையம், அட்ரீனல், கோணாடு, சுரப்பிகள் மிகச்சிறப்பாக இயங்கச் செய்யும்.

நாம் முதலில் இந்த ஆசனத்தைப் பயில வேண்டும். பின்பு நம் குழந்தைகளுக்கும் இதனை இளம் வயதில் பயிற்றுவிக்க வேண்டும். நாம் (தாய், தந்தை) பயிலாமல் குழந்தையை மட்டும் யோகாசனம் பயிலுங்கள் என்று கூறுவது தவறு. முதலில் நம் குழந்தைகளுக்கு நாம் எடுத்துகாட்டாக இருக்க வேண்டும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!