உடலில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே இதை செய்தாலே சீக்கிரம் குணமாகிடுமாம்..!


வீட்டில் சமைக்கும் போது, அயர்ன் செய்யும்போது என தெரியாமல் கை, கால்களில் சுட்டுக் கொள்வோம். அதேபோல், வண்டி ஓட்டும்போது சைலன்சரில் சூடு வைத்துக் கொண்ட அனுபவம் ஏறக்குறைய நம் எல்லோருக்குமே இருந்திருக்கும்.

அப்படி ஏற்படும் சின்ன சின்ன தீக்காயங்களுக்கு நாம் என்ன தான் செய்யலாம்?

1. உடலில் தீக்காயம் ஏற்பட்டால் 20 மி.லி. தேங்காய் எண்ணெய்யுடன் 50 மி.லி. தெளிந்த சுண்ணாம்பு நீரைக் கலந்து தீப்புண் மீது தடவினால், விரைவில் குணம் கிடைக்கும்.


2. வேப்பம் மரப் பட்டையைத் தண்ணீரில் போட்டு நன்றாகக் காய்ச்சவும். இந்த நீரை மத்தால் சிலிப்பினால் நுரை உண்டாகும். இந்த நுரையை, தீப்புண் மீது பூசினால் தீப்புண்ணும் ஆறும். அதனால் ஏற்பட்ட வடுவும் மறையும்.

3. மரிக்கொழுந்து இலையைப் பறித்து சுத்தம் செய்து, நல்லெண்ணெய் கலந்து வெய்யிலில் காயவைத்து எடுத்து, தீப்புண் மீது தடவினால், தீப்புண் குணமாகும்.

4. தீப்புண் ஏற்பட்ட இடத்தில், காபி டிகாக்ஷனைத் தடவினால் தீப்புண் உடனே ஆறும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!