மூட்டுவலி, வீக்கம், கீழ்வாதத்தை விரைவிலேயே குணப்படுத்தும் புளி.. எப்படி சாப்பிட வேணும்..?


புளிப்புச் சுவையை மிகச்சரியான அளவில் நமக்கு கொடுக்கும் ஒரு பொருள் தான் நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்துகிற புளி. அதன் முழு அர்த்தமும் தெரிந்து அப்பெயர் வைத்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

நம்முடைய முன்னோர்கள் புளியை அன்றாட உணவில் வெறும் சுவைக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று எண்ணி, நாமும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் புளிக்குள் ஒளித்திருக்கும் ஏராளமான மருத்துவ உண்மைகளைப் பற்றி நாம் அறிந்து கொண்டதே இல்லை.

முன்பெல்லாம் வயதானவர்களுக்குத் தான் மூட்டுவலி பிரச்னைகள் இருக்கும். ஆனால் இன்றைய வாழ்க்கைச் சூழல், உணவுப் பழக்கங்களால் எந்த பிரச்னையும் எத்தனை வயதில் வேண்டுமானாலும் வருகிறது. ஆனால் இந்த மூட்டுவலியைப் போக்கும் ஆற்றல் புளிக்கு உண்டு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.


முதலில் நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு புளியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரும். அதிகபட்சமாக 100 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.

புளி எலும்புகள் தேய்மானத்தைக் குறைக்கும் தன்மையுடையது. அதனால், எலும்புகளின் தேய்வால் உண்டாகும் மூட்டுவலி விரைவிலேயே கட்டுக்குள் வரும். 100 கிராம் புளியில் ஒரு நாளைக்கு நமக்குத் தேவைப்படுகிற இரும்புச்சத்து முழுமையும் கிடைக்கிறது.

அதேபோல், ஜீரணக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு ஆற்றல், உடலின் ரத்த ஓட்டம் உள்ளிட்டவைகளை புளி சீராக்குகிறது.

மேலும், உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. அதோடு உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளைக் கரைக்கும் சக்தியும் புளிக்கு உண்டு. கால்களில் உண்டாகும் நீர்த்தேக்கம், வீக்கம், கீழ்வாதம் போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!