ராத்திரி இத்தனை மணிக்கே சாப்பிட்டா எடை நல்லா குறையுமாமே?


சாப்பாடு என்று வந்துவிட்டால் நாம் எதையும் கவனிக்க மாட்டோம். ஒன்னு எப்போ பார்த்தாலும் சாப்பிடுவோம் இல்லைன்னா டைம்க்கு சாப்பிட மாட்டோம். ஒரு பழமொழி சொல்லுவாங்க காலை உணவை ராஜாவைப் போல் சாப்பிட வேண்டும், மதிய உணவை இளவரசனைப் போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலும் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். மேம்போக்காக பார்த்தால் இது வேடிக்கையாக இருந்தாலும் இதில் பல நன்மைகளும் உண்மைகளும் பொதிந்து உள்ளது. இரவில் வயிறு முட்ட சாப்பிட்டு தூங்கினால் எப்படி தூக்கம் வரும். ஆனால் நாம் அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறோம்.

​மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

காலையில் ஆபிஸூக்கு போகும் அவசரத்தில் எங்க ராஜா மாதிரி சாப்பிடுறது சொல்லுங்க. கொஞ்சம் உங்கள் உணவை கவனியுங்கள். ஆரோக்கியமான உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதே நாம் உடலுக்கு செய்யும் நன்மை. அதிலும் தூங்கப் போகும் முன் உங்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டும். சீரணிக்காத உணவுகளை சாப்பிடுவதே அதிகப்படியான உடல் எடையை கூட்டி விடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

​என்ன நடக்கும்?

சீரணிக்காத உணவுகளால் உங்களின் தூக்கமும் கெடும். எனவே உங்கள் இரவு உணவு நேரத்திற்கும் தூக்க நேரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட இடைவெளி இருக்க வேண்டும்.

எனவே இன்றிலிருந்து இரவில் சீக்கிரமாக உணவை எடுத்துக் கொள்ள முயலுங்கள். உணவு எடுத்துக் கொண்ட பிறகு 3 மணி நேரம் கழித்து உறங்கச் செல்லுங்கள். இப்படி செய்யும் போது உணவும் நல்ல செரிமானம் ஆகும். தூக்கமும் நல்லா வரும். காலையில் எழும் போது வயிறும் நல்லா பசிக்கும்.

​எடை கட்டுக்கோப்பு

உங்கள் உடல் எடையும் கட்டுக்கோப்பாக இருக்கும். சிலர் இரவு உணவிற்கு முன் மாலை நேரத்தில் சிற்றுண்டி ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்கிறார்கள். இதுவும் உங்கள் வயிறு நிரம்பிய சூழலை தரும். எனவே மாலை நேரத்தில் அதிகளவு ஸ்நாக்ஸ் சாப்பிடாதீர்கள். உங்களுக்கு பசி எடுத்தால் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சீஸ், யோகார்ட், குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் தானியங்களை சேர்த்து சாப்பிடலாம். இது உங்களை லேசாக உணர வைப்பதோடு ஆரோக்கியமானதாக வைக்கும்.

எந்த டைம்ல சாப்பிடலாம்?

அதனால் எடையைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கவும் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய இரவு உணவை இரவு 7 மணிக்கு சாப்பிட்டு விடுங்கள். சிலர் இரவு உணவுக்குப் பின் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். அப்படி இருக்காதீர்கள். இரவு உ ணவுக்குப் பின் குறைந்த பட்சம் 2 மணி நேரமாவது இடைவெளி விட்டு பிறகு படுக்கைக்குச் செல்லுங்கள். அதாவது 7 மணிக்கு இரவு உணவை முடித்துக் கொண்டால், 10 மணிக்கு உறங்கச் செல்லலாம்.

​தள்ளிப் போனால்

எவ்வளவுக்கு எவ்வளவு இரவு உணவை வேகமாக முடித்துக் கொள்கிறீர்களோ அது உங்களுடைய உடலுக்கு நல்லது. இல்லையென்றால், இரவு தூங்குவதற்கான நேரம் என்பது அதிகமாகிக் கொண்டே போகும். அதனால் போதிய அளவு தூக்கமில்லாமல் காலையில் எழுந்திருக்க வேண்டிய நிலை வரும். இவை மீண்டும் உங்களுடைய ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்து விடும்.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!