அதிவேக மொபைல் டேட்டா – மீண்டும் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ..!


மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி இந்தியாவில் அதிவேக மொபைல் டேட்டா வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

அக்டோபர் மாத நிலவரப்படி நொடிக்கு 21.8 எம்.பி. வேகத்தில் மொபைல் டேட்டா டவுன்லோடு வேகம் வழங்கியுள்ளது. இதே மாதத்தில் ஐடியா செல்லுலார் தனது அதிவேக டவுன்லோடு வேகத்தை வழங்கியுள்ளது. அந்நிறுவனம் நொடிக்கு 7.1 எம்பி வேகம் வழங்கியுள்ளது.

வோடபோன் நிறுவனமும் தனது அதிகபட்ச வேகத்த வழங்கியிருந்தாலும், ஜியோ இருமடங்கு அதிவேக இண்டர்நெட் வழங்கியுள்ளது. அக்டோபர் மாதத்தில் வோடபோன் நொடிக்கு 9.9 எம்பி வேகத்தில் இண்ட்ர்நெட் வழங்கியுள்ளது. எனினும் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது ஜியோ டவுன்லோடு வேகம் குறைந்துள்ளது.


செப்டம்பர் மாத வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ டவுன்லோடு வேகம் நொடிக்கு 21.9 எம்பி வரை இருந்துள்ளது. பாரதி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற போட்டி நிறுவனங்களும் தங்களது அதிகபட்ச வேகத்தை வழங்கியுள்ளன. இவை முறையே நொடிக்கு 9.3 எம்பி மற்றும் 8.1 எம்பி வரை இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் மொபைல் டேட்டா வேகங்களை மை ஸ்பீடு செயலி மூலம் சேகரித்து தகவல்களை வழங்குகிறது. அப்லோடு வேகத்தை பொருத்த வரை ஐடியா செல்லுலார், வோடபோன் நிறுவனங்கள் முறையே நொடிக்கு 6.2 எம்பி மற்றும் 4.9 எம்பி வழங்கியுள்ளன. பாரதி ஏர்டெல் நொடிக்கு 3.9 எம்பி வேகம் வழங்கியுள்ளது.

தினசரி அடிப்படையில் ஜியோ நெட்வொர்க் சராசரி டவுன்லோடு வேகம் நொடிக்கு 19.6 எம்பி முதல் 25.2 எம்பி வரை இருந்துள்ளது. வோடபோன் நெட்வொர்க் டவுன்லோடு வேகம் நொடிக்கு 6.8 எம்பி முதல் 9.3 எம்பி மற்றும் ஐடியா நிறுவனத்தில் நொடிக்கு 8.6 எம்பி முதல் 9.8 எம்பி வரை இருந்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் நொடிக்கு 4.9 எம்பி முதல் 8.7 எம்பி வரை வழங்கியுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!