தூக்கியெறியும் முருங்கைக்காய் விதைக்குள் அப்படி என்னதான் இருக்கிறது… இத முதல்ல படிங்க..!


முருங்கைக்காய் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா என்ன? ஆனால் முருங்கைக்காய் விரும்பிச் சாப்பிடுபவர்களும் கூட அதன் விதையைத் தூக்கி வெளியே எறிந்துவிடுவதுண்டு.

முருங்கைக்காய் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா என்ன? ஆனால் முருங்கைக்காய் விரும்பிச் சாப்பிடுபவர்களும் கூட அதன் விதையைத் தூக்கி வெளியே எறிந்துவிடுவதுண்டு.

ஆனால் முருங்கைக்காயை விடவும் அதன் விதை அபார சுவையும் சத்துக்களும் நன்மைகளும் அடங்கியிருக்கின்றன என்பது தெரியவில்லை.


அப்படி என்னதான் அந்த முருங்கைக்காய் விதைக்குள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

முருங்கை விதை மூட்டுகளில் உள்ள பிரச்னையைத் தீர்க்கும். அதில் அதிக கால்சியம் உள்ளதால் எலும்புகளும் உறுதியாகும்.

முருங்கை விதைகளில் முப்பது விதமான ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை செல்களை ஆரோக்கியமாகப் பாதுகாக்கும்.


ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சக்தி இதற்கு உண்டு. சர்க்கரை வியாதி வராமலும் தடுக்கும்.

செல் சிதையாமல் பாதுகாக்கும் முருங்கை விதைகள் புதிய செல்கள் உருவாவதை அதிகரிக்கும்.

முருங்கை விதை பல வியாதிகளை உங்கள் அருகில் நெருங்கவே விடாது. பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அடிக்கடி முருங்கை விதைகளை உணவில் எடுத்துக் கொண்டால் தூக்கமின்மை பிரச்னை தீரும்.

இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றும் வேலையை முருங்கை விதைகள் செய்கின்றன.


புற்றுநோய் வராமல் தடுப்பதில் முருங்கை விதைகளுக்கு மிக முக்கியப் பங்குண்டு.

அதனால் முருங்கை விதைகளை சூப் வைத்தோ அல்லது நெய்யில் வதக்கியோ, புளிக்குழம்பு அல்லது வத்தல் குழம்பில் போட்டோ சாப்பிட்ட வரலாம்.

காய்ந்த விதைகளையும் தூக்கிப்போட வேண்டிய அவசியமில்லை. அதை பொடி செய்து வைத்துக்கொண்டு, வீட்டிலுள்ள ஆண்களுக்கு தினமும் பாலில் கலந்து குடிக்கலாம். ஆண்மை வீரியம் அதிகரிக்கும். -Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!