பேஸ்புக் மெசஞ்சரை தாக்க வருகிறது வைரஸ்.. கம்யூட்டர் முடங்கிவிடும் அபாயம்..!


மெசஞ்சரை தென்கொரிய வைரஸ் ஒன்று தாக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக பேஸ்புக் திகழ்கிறது. அதன் தகவல் பரிமாற்ற செயலியாக மெசஞ்சர் செயல்படுகிறது.

இந்நிலையில் தென்கொரியாவில் இருக்கும் டிஜிமைன் நிறுவனம், கிரிப்டோ கரன்சி என்ற வைரஸை வெளியிட்டுள்ளது.

அது பேஸ்புக் மெசஞ்சர் மூலம் வீடியோவாக வரக் கூடியது. அதனை திறந்து பார்த்தால் நமது நண்பர்கள் அனைவருக்கும் பரவிவிடும்.


இதையடுத்து நமது கம்யூட்டர் முடங்கிவிடும். இந்த வைரஸ் வியட்நாம், உக்ரைன், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வெனிசுலா ஆகிய நாடுகளை தாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளை தாக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இணையவாசிகள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!