இந்த பழக்கவழக்கங்களால் உங்க சிறுநீரகம் சீக்கிரமே பாதிப்படைகிறது..!

சில பழக்கங்கள் நமது சிறு நீரகத்தினை பாதித்து விடுகின்றன. சிறு நீரகம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. ரத்தத்தினை வடி கட்டி சுத்தம் செய்கின்றது. ஹார்மோன்களை கொடுக்கின்றது. இந்த ஹார்மோன்கள் சத்துக்களை அளிக்கின்றது. தாது உப்புக்களை உணவிலிருந்து எடுத்துக்கொள்கின்றது. ஒரு திரவ உற்பத்தி மூலம் நச்சுக்களை உடலிலிருந்து நீக்குகின்றது.

சிறு நீரக செயல்பாட்டு குறைவோ (அ) பாதிப்போ உடனடி வெளிப்படையாகத் தெரியாது. ஆய்வுகள் கூறுவது சிறுநீரகங்கள் 20 சதவீத செயல்பாட்டு திறனில் கூட வேலை செய்யும். ஆனால் சிறுநீரக பாதிப்பு என்பது உடலில் அநேக பாதிப்புகளை ஏற்பத்தும் என்பதால் உடனடி கவனம் செலுத்த வேண்டும். சிறுநீரக பாதிப்பினை பாதிக்கும் சில பழக்கங்கள்.

* காபி, டீ போன்றவை உடலில் நீர் சத்தினை குறைக்க வல்லது. தேவையான அளவு நீர் உடலுக்கு உடல் உறுப்புகளுக்கும் மிக அவசியம். நீர்சத்து சிறுநீரகம் உடலில் நச்சுக்களை நீக்கும் வேலையினை எளிதாக்குகின்றது. தேவையான அளவு உடலில் நீர்சத்து இருப்பது சிறுநீரக கற்கள் உருவாகுவதனை தவிர்க்கின்றது.

* 2.2-2.5 லிட்டர் அளவு அதாவது 8-9-லிட்டர் அளவு நீர் அவரவர் உடல் உழைப்பு, வேலையினைப் பொறுத்து தேவையாகின்றது. மருத்துவர் குறிப்பிட்ட அளவு, காலம் இவற்றினைப் பொறுத்தே ஒருவர் எந்த மருந்தினையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இது மிக அவசியம். இதைவிட்டு மனம்போன போக்கில் மருந்தினை எடுத்துக்கொள்வதும், நிறுத்துவதும் சிறு நீரகத்தினை வெகுவாய் பாதிக்கும்.

சோடியம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது. அதாவது உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்வது உடலை அதிகம் பாதிக்கும்.
உயர் ரத்த அழுத்தம், ரத்த நாளங்களை தடிக்க வைப்பதும், அடைப்பை ஏற்படுத்தும் செயல் கொண்டதும் ஆகும் என்பதால் ரத்த அழுத்தத்தினை அவ்வப்போது பரிசோதித்து கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.

* சிறுநீர் செல்ல வேண்டிய நேரத்தில் அதனை அடிக்கடி கட்டுப்படுத்தி வைப்பது சிறுநீரக பாதிப்பினை ஏற்படுத்தும்.
* அதிக சர்க்கரை சிறு நீரக பாதிப்பினை ஏற்படுத்தும்.
* மது, புகை பழக்கம் கூடாது.
* மிக அதிக அசைவம் தவறு.
* உடற் பயிற்சி இல்லாமல் அமர்ந்தே இருப்பது கூடாது.
* 8 மணி நேர தூக்கம் அவசியம்.

இவ்வாறு சில கவனங்களை நாம் அன்றாட வாழ்வில் மேற்கொண்டால் சிறுநீரகங்கள் பாதுகாப்பாக இருக்கும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!