குழந்தைகளுக்கு தேனை கொடுத்து ஆபத்தை விலை கொடுத்து வாங்காதீர்கள்.! இத முதல்ல படிங்க..!


தேன் எல்லோருக்கும் ஏற்ற ஒரு உணவு என சொல்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட தேனை சிறு குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது.

பூக்களிலிருந்து தேனை வண்டுகள் சேகரிக்கும் போது, அதன் மகரந்தத்தில் அதில் இருக்கும் கொல்ஸ்ட்ரீடியம் பொடுலினம் எனப்படும் சில பாக்டீரியாக்கள் இருக்கும்.


ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு தேனை கொடுக்கும் போது இந்த பாக்டீரியாக்கள் குழந்தையின் உடல் சோர்வை உண்டாக்குவதோடு, மலச்சிக்கல், உடல் சோர்வாகி அழுதல், பால் குடிக்காமல் இருத்தல், ஆஸ்துமா, அலர்ஜி உள்ளிட்ட பிரச்னைகளை கொண்டுவரும்.

இதனால் ஒரு வயதை கடந்த குழந்தைகளுக்கு மட்டும் தேனை கொடுப்பது சிறந்தது.-Source:tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!