உலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறப்பு..!


அமெரிக்காவில் இருக்கும் தலைமையிடத்தை விடவும், உலகிலேயே மிகப்பெரிய அமேசான் கட்டிடம் ஐதராபாத்தில் திறக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் ஆன்லைன் மர்க்கெட்டிங்கில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு ஆன்லைன் நிறுவனங்களும் இந்தியாவின் மீது அதிகப்படியான கவனத்தை செலுத்தி வருகின்றன.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அமேசான். இந்நிறுவனம் இந்தியாவில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பணியில் அமர்த்தி இயக்கி வருகிறது. இந்தியாவில் அமேசான் அதிக வர்த்தக பரப்பு கொண்டுள்ளது.

அமேசான் நிறுவன கட்டிடத்தின் உட்புறம்

இந்நிலையில் அமேசான் நிறுவனமானது, தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு, 30 ஆயிரம் சதுரஅடி பரப்பு கொண்ட பிரம்மாண்ட கட்டிடத்தை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியது.

இந்த பிரம்மாண்ட கட்டிட பணிகள் முடிவடைந்து, நேற்று முன்தினம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த கட்டிடம் உலகிலேயே மிகப்பெரிய பிரம்மாண்ட அமேசான் நிறுவன கட்டிடமாகும்.

இந்த பிரம்மாண்ட அலுவலகத்தில் சுமார் 15 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இந்த 30 ஆயிரம் சதுரஅடி பிரம்மாண்ட கட்டிடம் தான் உலகில் மிகப்பெரிய அமேசான் நிறுவன கட்டிடம் ஆகும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!