விவோ நிறுவனத்தின் 16 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

விவோ நிறுவனத்தின் Y சீரிஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய Y75 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் எச்டி+ 18:9 ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 16 எம்பி செல்ஃபி கேமரா, ஃபேஸ் வேக் மற்றும் ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 3.2 கொண்டு இயங்கும் விவோ Y75 ஸ்மார்ட்போன் 13 எம்பி பிரைமரி கேமரா கொண்டுள்ளது. இத்துடன் டூயல் நானோ சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் கைரேகை ஸ்கேனர் மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

விவோ Y75 சிறப்பம்சங்கள்:


– 5.7 இன்ச் 1440×720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P23 16nm பிராசஸர்
– மாலி G71 MP2 GPU
– 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஃபன்டச் ஓ.எஸ். 3.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
– 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
– கைரேகை ஸ்கேனர்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்ஏஎச் பேட்டரி

விவோ Y75 ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் புதிய விவோ Y75 ஸ்மார்ட்போன் 1598 யுவான் இந்திய மதிப்பில் ரூ.15,510 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவோ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விவோ Y75 ஸ்மார்ட்போன் சீனாவில் விற்பனை துவங்கியுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!