இன்று சனிப்பெயர்ச்சி.. கோயிலில் என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் தெரியுமா..?


ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்தலை பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. எல்லா கிரகங்களுக்கும் பெயர்ச்சி உள்ளது என்ற போதிலும், சனிப்பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது. சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால், ஒவ்வொரு ராசியில் இருந்து இடம் பெயர இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதைத் தான் சனிப்பெயர்ச்சி என்கிறோம். தற்போது ​ விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு சனி பெயர்ச்சி நிகழ இருக்கிறது.


சனிச் சஞ்சாரம்.!
ஏழரைச் சனி என்பது ஒரு ராசியிலும் அதற்கு முந்தைய ராசியிலும், பிந்தைய ராசியிலும், சனி சஞ்சரிக்கும் காலம் ஆகும். அதாவது, முந்தைய ராசியில் 2.5 வருடம், அந்த ராசியில் 2.5 வருடம், பிந்தைய ராசியில் 2.5 வருடம், ஆக மொத்தம் 7.5 வருட காலத்தை ஏழரைச் சனி என அழைக்கிறார்கள். ஒவ்வொருவருடைய 30 ஆண்டு கால வாழ்க்கையிலும் 7.5 சனி ஆதிக்கம் இருந்து கொண்டே இருக்கும்.


சனி தோஷத்தை நீக்கும் எளிய பரிகாரங்கள்.!

சனி பெயர்ச்சி மற்றும் ஏழரை சனி, கர்ம சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டக சனி, கண்டக சனி என எல்லாவித சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் மிக எளிய பரிகாரங்கள் உள்ளன.

தினமும் சூரியன் எழுவதை தரிசித்து மூன்று முறை சூரியனுக்கு நல்லெண்ணெய் பூமியில் வார்க்கலாம். பின்பு மூன்று முறை நீர் வார்க்கவும்.

தினமும் காக்கைக்கு சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பின்பு கருப்பு எள் கலந்து, சிறு உருண்டைகளாக மூன்று பிடித்து வைக்கலாம். பின்பு நாய்க்கு உணவிடவும். கருப்பு எள்ளு, உளுந்து மற்றும் சர்க்கரை சேர்த்து பொடி செய்து தினமும் எறும்புகளுக்கு இட்டு வரலாம்.


முடிந்த பொழுது சிவன் கோவில்களை சுத்தம் செய்தல் நலம். ஒவ்வொரு சனி இரவு 8-9 வேளையில் அரச மரத்தடியில் இரும்பு விளக்கில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வரலாம்.

உணவில் அதிகம் மிளகு சேர்த்து கொள்ளலாம். மேலும் காலை உணவிற்க்கு முன் மூன்று கருப்பு மிளகு கடித்து சுவைத்து உண்டு வரவும்.

சனியால் திருமண தோஷம் ஏற்பட்டிருந்தால், சனிக்கிழமையில் எமனையும் பிரஜாபதியையும் வழிபடுவது நல்லது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதும், ஹனுமன் சாலீஸா படிப்பதும் மிகவும் நல்லது. வன்னி சமித்தால் ஹோமம் செய்வதும் எள் தானம் செய்வதும் சிறப்பாகும்.


ஒருமுறை திருநள்ளாறு திருத்தலத்துக்குச் சென்று, ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரையும், சனி பகவானையும் முறைப்படி வழிபட்டு வாருங்கள். வயோதிகர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவுங்கள்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!