எப்படிப்பட்ட விஷ பூச்சிகள் கடித்தாலும் உடனே இந்த மூலிகைய மட்டும் கொடுத்தால் காப்பாற்றலாம்..!


தேள் கொட்டினால்: எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும்.

கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும்.


சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.

வெறி நாய் கடி,நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறுவிட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.


நல்ல பாம்பு கடி,வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு கொடுக்கவும்

வண்டு கடி,கார வெற்றிலை எடுத்து, 8 மிளகு சேர்த்துக் உண்ண கொடுக்கவும்.

எலி கடித்து விட்டால்,வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆறிவிட விஷம் நீங்கும், நாய்க்கடிக்கும் இது உகந்தது.


பூரான் கடி,பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.

குப்பைமேனி இலையையும், உப்பையும் சமமாக வைத்து சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து பூரான் கடித்த இடத்தில் இதனை பூசி விட்டு நான்கு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். உடல்முழுவதும் தடிப்பு காணப்பட்டால் இதனை உடல்முழுவதும் பூசி குளிக்க வேண்டும்.


100 மிலி வெற்றிலை சாற்றில் 35 கிராம் மிளகு சேர்த்து 12 மணி நேரம் நன்றாக ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து சீசாவில் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் பூரான் விஷம் குணமாகும். ஆனால் புளி, நல்லெண்ணெய் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.


தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்து கொடுக்க வேண்டும், ஒரு வாரம் காலை மாலை கொடுக்கவும்.-Source:tamil.webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!