ஒப்பிடும் போது, ஆப்பிள் கருவிகளை விட ஆண்ட்ராய்டு கருவிகள் பெருவாரியான மக்களை கவர்வதற்கு முக்கியமான காரணம் அவைகள் ‘யூசர் பிரெண்ட்லி’ கருவிகளாகும். பயனர் நட்பு என்றால் பயனர் அவரின் கருவியை எப்படியெல்லாம் தன் விருப்பத்திற்கு ஏற்ற வண்ணம் மாற்றியமைக்க விரும்பினாலுக் அதற்கு வளைந்துகொடுக்கும் தன்மை கொண்ட நிலைப்பாட்டை தான் ‘யூசர் பிரெண்ட்லி’ என்கிறோம்.
வெளிப்படையாக கூறவேண்டுமென்றால் நம்மில் பெரும்பாலானோர்கள் ஆண்ட்ராய்டு கருவிகளை நமக்கேற்ற வசதியான ஒரு கருவியாக பயன்படுத்துவதில்லை. உண்மையில் உங்கள் கையில் இருக்கும் ஆண்ட்ராய்டு சாதனங்கள் நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத வண்ணம் திறன் கொண்டவைகள், அது நம்பமுடியாத விடயங்களை தன்னுள் அடைத்து வைத்துள்ளது. அம்மாதிரியான ஆண்ட்ராய்டு இரகசியங்கள் 90% பயனர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதை தெரியபப்டுத்தும் தொகுப்பே இது.!
டெக்ஸ்ட்-டூ-ஸ்பீச்
உங்களால் ஒரு கட்டுரையை வாசிக்க மட்டுமில்லாது அதை கேட்கவும் முடியும் அதற்கு நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு சாதனத்தை கையில் கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு உள்வரும் தகவல்களை பார்ப்பதற்கு பதில் நீங்கள் கேட்க விரும்பினால் செட்டிங்ஸ் > அக்ஸஸிபிலிட்டி சென்று டெக்ஸ்ட்-டூ-ஸ்பீச் அவுட்புட் ஆப்ஷனை ஆன் செய்யவும்.
ஸ்மார்ட்போன் ரிமோட் கண்ட்ரோல்
செட்டிங்ஸ் > செக்யூரிட்டி சி என்று டிவைஸ் அட்மினிஸ்ட்ரேட்டர்ஸ் சென்று ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் அருகாமையில் இருக்கும் பெட்டிகளில் அல்லோ ரிமோட் லாக் அண்ட் ஏரேஸ் ஆப்ஷனை இயக்க ஒருவேளை நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை இழந்தால் நீங்கள் அதை எளிமையாக இந்த குறிப்பிட்ட வலைத்தளம் மூலம் நீங்கள் கண்டறியலாம் மற்றும் பிளாக் செய்யாமல் உங்கள் தகவல்களை மீட்கலாம் – அந்த வலைத்தளம் நுழைய இங்கே க்ளிக் செய்யவும்.!
எளிமையான பேட்டரி சேவர்
நீங்கள் உங்கள் திரையில் கருப்பு அல்லது எளிய இருண்ட பின்னணி தேர்வு செய்தால், உங்கள் ஆண்ட்ராய்டு அக்கருவியின் ஆட்டோமட்டிக் பிக்சல் ஹைலைட்டிங் அணைக்கப்படும் மற்றும் இதன் மூலம் நீங்கள் உங்கள் சாதனம் நீண்ட நேரம் சார்ஜ் நீடிக்கப் பெறுவதை காணலாம். இந்த குறிப்பிட்ட அம்சம் தற்போதைக்கு அனைத்து ஆண்ட்ராய்டு கருவிகளிலும் கிடைக்காது என்பதும் ஒருவேளை அப்டேட் செய்யப்பட்டு என்பதால் முயற்சி செய்து பார்க்க பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.
கெஸ்ட் மோட்
நீங்கள் தற்காலிகமாக மற்றொரு நபருக்கு உங்கள் தொலைபேசியை கொடுக்க வேண்டும் அதே சமயம் உங்கள் தனிப்பட்ட தரவுகளின் ரகசியத்தையும்பாதுக்காக்க வேண்டுமெனில் உங்களுக்கு கெஸ்ட் மோட் உதவும். இரண்டு விரல்களால் மேலிருந்து கீழே ஸ்வைப் சிறிது மேல் வலது பக்கத்தில் உள்ள பயனர் ஐகானை டாப் செய்யவும். ஆட் கெஸ்ட் ஐகான் தோன்றும், இப்போது நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை கையாளும் நபர் எடுக்க அனுமதிக்க வேண்டிய நடவடிக்கைகளை தேர்வு செய்ய முடியும்.
ஸ்க்ரீன் மெக்னீபையர்
சில கண்பார்வை கோளாறு கொண்ட மக்கள் பெரும்பாலும் இந்த வசதியை இயக்கி கொள்ள பரிந்துரைக்கப்படுகிறீர்கள். வெறுமனே செட்டிங்ஸ் > அக்ஸஸிபிலிட்டி > மேக்னிபிக்கேஷன் கெஸ்டர்ஸ் செயல்படுத்துவதின் மூலம் நீங்கள் டாப் செய்யும் குறிப்பிட்ட இடம் மட்டும் டிஸ்ப்ளேவில் பெரிதாகும்.
ஹாட்ஸ்பாட் மோட்
ஹாட்ஸ்பாட் நிகழ்த்த நீங்கள் ஒரு தனி 3ஜி மோடம் அல்லது ரவுட்டர் வாங்க தேயைவேயில்லை. செட்டிங்ஸ் > டீத்தரிங் அண்ட் போர்ட்டபிள் ஹாட்ஸ்பாட் உள்நுழைந்து போர்ட்டபிள் வேன் ஹாட்ஸ்பாட் தேர்வு செய்துகொள்ளவும்.
தலை அசைவு மூலம் ஸ்மார்ட்போன் கட்டுப்பாடு
சூழ்நிலைகள் நீங்கள் உங்கள் கேஜெட் பயன்படுத்தும் முறையை ஆக்கிரமிக்கின்றன ஒருவேளை உங்கள் கருவியை கைகளால் இயக்க முடியாத நிலை ஏற்பட்டால் ஒரு தீர்வு இருக்கிறது. ஈவா பேஷியல் மவுஸ் என்றவொரு ஒரு இலவச பயன்பாட்டை நிறுவுவதின் மூலம் நீங்கள் உங்கள் தலை இயக்கங்கள் கொண்டு உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தை கட்டுப்படுத்த முடியும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!