ஒரு நாளைக்கு உணவில் எவ்வளவு எண்ணெய் சேர்த்தால் ஆரோக்கியமானது..?


உணவில் எப்படி இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை அளவோடு சேர்க்கிறமோ, அதே போன்று இந்த எண்ணெய் விஷயத்திலும் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும்.

எந்த ஒரு உணவாக இருந்தாலும் அதன் அளவு என்பது மிக அவசியமானதாகும். எப்படி உணவில் இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை அளவோடு சேர்க்கிறமோ, அதே போன்று இந்த எண்ணெய் விஷயத்திலும் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும்.

அதிக எண்ணெயை சேர்த்தால் எப்படிப்பட்ட அபாயங்கள் உண்டாகும் என்பது நமக்கே நன்கு தெரிந்த ஒன்று தான். இதில் குறிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு எண்ணெய்க்கும் தனி தன்மை உண்டு என்பதை தான்.

வீடுகளில் நாம் சமைக்க பயன்படுத்தும் பல வித எண்ணெய்களின் தன்மையை பொருத்து அவற்றை எவ்வளவு உபயோகப்படுத்த வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

* ஆரோக்கியம் அதிகம் கொண்ட தேங்காய் எண்ணெயை உணவில் சேர்க்கும் போது சற்று ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். காரணம் இவற்றில் 90% கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் தான். மேலும், இவை நல்ல கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்ய உதவும். நீங்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துபவராக இருந்தால் 3 அல்லது 4 டீஸ்பூனிற்கு மேல் ஒரு நாளைக்கு பயன்படுத்த கூடாது.


* வைட்டமின் ஈ நிறைந்துள்ள சூரிய காந்தி எண்ணெயை உணவில் சேர்த்து கொள்வதால் பல நன்மைகள் உண்டாகும். எவ்வளவு தான் சூரிய காந்தி எண்ணெயை நாம் சூடு செய்தாலும் அதன் ஊட்டச்சத்துக்கள் குறையாமல் அப்படியே இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதனை ஒரு நாளைக்கு 3 ஸ்பூன் அளவு எடுத்து கொள்வது சிறந்தது.

* கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்ய ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. சமையலுக்கு மற்ற எண்ணெய் வகைகளை விடவும் இது மிக பொருத்தமாக இருக்கும். இதனை ஒரு நாளைக்கு 3 முதல் 4 ஸ்பூன் அளவுக்கு சமையலுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

* குறைந்த அளவிலேயே இதில் கெட்ட கொழுப்புகள் உள்ளன. ஆதலால், இதை சமையலில் பயன்படுத்துவது நல்லது தான். கடலை எண்ணெயை 3 ஸ்பூன் அளவு ஒரு நாளைக்கு எடுத்து கொள்ளலாம் என உணவியல் நிபுணர்கள் ஆலோசனை தருகின்றனர்.

எந்த வகை எண்ணெய்யாக இருந்தாலும் அவற்றை அளவாக நாம் பயன்படுத்தி வந்தால் எந்த வித பாதிப்புகளும் உண்டாகாது. ஒரு நாளைக்கு 3 முதல் 4 ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இதன் அளவு மீறினால் சிலபல அபாயங்கள் நிச்சயம் உண்டாகும் என ஆய்வுகளின் முடிவுகள் சொல்கின்றன.

எண்ணெய்யை உணவில் அதிக அளவில் சேர்த்து கொண்டால் முதலில் வர கூடிய பாதிப்பு கொலஸ்ட்ரால் தான். பிறகு உடல் எடை கூடுதல், இதய நோய்கள், மாரடைப்பு, இரத்த ஓட்டம் பாதிக்கப்படுதல் போன்ற பல பிரச்சினைகள் அடுக்கடுக்காக உண்டாகும். அது மட்டும் இல்லை, இது தொடர்ந்தால் உயிரை இழக்க நேரிடும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!