பூமி நோக்கி வரும் ராட்சச சிறுகோள் – அதிர வைத்த நாசா விஞ்ஞானிகள்..!


பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் இந்த ராட்சச சிறுகோளிற்கு அஸ்டிராய்டு FT3 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த சிறுகோள் சுமார் 1,115 அடி மற்றும் 340 மீ விட்டம் கொண்ட பாறையினால் ஆனது என்று நாசா சிறுகோள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் நாசா கணித்துள்ள கணிப்பின் படி 2019 ஆண்டு முதல் 2116 ஆம் ஆண்டு வரை சுமார் 165 சிறுகோள் தாக்குதலைப் பூமி சந்திக்க போகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது. அஸ்டிராய்டு FT3 என்று அழைக்கப்படும் இந்த சிறுகோள் அக்டோபர் 3, 2019 தேதி பூமியை நோக்கி அல்லது பூமியைத் தாண்டி செல்லும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளது போல, இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் கடந்து சென்றால் பூமிக்கு ஏற்படும் பேரழிவு மற்றும் ஆபத்து குறைவானது தான், ஆனால் இச்சிறுகோள் தற்பொழுது வந்து கொண்டிருக்கும் பாதையில் மாற்றம் ஏற்பட்டால் நிச்சயமாக விலகி பூமிக்கு நேராக வந்தால், முடிவுகள் பேரழிவு தரும் என்பதில் சந்தேகமில்லை என்று நாசா கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!