இரண்டே நாட்களில் வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் அற்புதமான கஞ்சி.! வீட்டில் எப்படி செய்வது..?


வயிற்றில் புண் அதிகமாக அதிகமாக அது வாய்ப்புண்ணாக நமக்கு வெளிக்காட்டும். அதற்கு என்னதான் மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் தீருவதில்லை.

வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்ணை பொருத்தவரையில் நம்முடைய முன்னோர்கள் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே குணப்படுத்தி வந்தனர். அதுபோல் வீட்டிலுள்ள கசகசா, தேங்காய்ப்பால் போன்ற சில பொருட்களைக் கொண்டே எவ்வளவு தீராத வயிற்றுப் புண்ணையும் ஆற்றிவிட முடியும்.

தேவையான பொருட்கள் :

கசகசா – 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 1 கப்
பச்சரி குருணை – 150 கிராம்
உப்பு – சுவைக்கு
நெய் – 1 தேக்கரண்டி


செய்முறை :

கசகசாவை அரை மணி நேரம் நீரில் ஊறவைத்து அதை தேங்காய் துருவலுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அரிசி குருணையில் தண்ணீர் சேர்த்து வேகவைத்து கஞ்சியாக காய்ச்சிடுங்கள். அரைத்து வைத்துள்ள கசகசா விழுதை அத்துடன் கலந்திடுங்கள்.

கஞ்சியை உப்பு மற்றும் நெய் கலந்து பரிமாறுங்கள்.

இந்த கஞ்சியை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுபுண் குணமாகும். உடல் குளிர்ச்சியாகும். முதியர்வர்கள் இதை இரவு சாப்பிட்டால் ஆழ்ந்து தூங்கலாம்.

இந்த கஞ்சியை பனங்கற்கண்டு சேர்த்தால் இனிப்பு சுவை கிடைக்கும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!