வாரிசு நடிகையுடன் ஊர் சுற்றும் கிரிக்கெட் வீரர்…!


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் ராகுலும், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதியா ஷெட்டியும் காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் அசாருதீன், விராட்கோலி ஆகியோர் சினிமா நடிகைகளை காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் ராகுலும் இந்தி நடிகையை காதலித்து வருகிறார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் ராகுலும், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதியா ஷெட்டியும் காதலிப்பதாக மும்பை சினிமாவில் பேச்சு கிளம்பியுள்ளது. இது குறித்து ராகுல் மற்றும் அதியாவுக்கு பொதுவான நண்பர் கூறியதாவது:-

‘ராகுலும், அதியாவும் ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள். அவர்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து டேட்டிங் செல்கிறார்கள். இருவரும் காதலில் ரொம்ப சீரியசாக உள்ளனர்’.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


நண்பர்கள் மூலம் ராகுலும், அதியாவும் சந்தித்துள்ளார்கள். நட்பாக தொடங்கியது பின்னர் காதலாகி இருக்கிறது. பொது இடங்களுக்கு ஜோடியாக சென்றால் காதல் என்று கிசுகிசு கிளம்புவதை தவிர்க்க பொது இடங்களில் சுற்றுவதில்லை என்கிறார்கள்.

இருவருக்கும் பொதுவான தோழியான ஆகான்ஷா ரஞ்சனுடன் சேர்ந்து ராகுலும், அதியாவும் படம் எடுத்து கொண்டனர். அவர்களின் புகைப்படத்தை யாரும் பார்த்தது இல்லை. அந்த புகைப்படத்தில் கூட ராகுல் தனது முகத்தை சரியாக காட்டாமல் நின்று கொண்டிருக்கிறார்.

முன்னதாக ராகுலும் நடிகை நிதி அகர்வாலும் காதலிப்பதாக பேசப்பட்டது. இது குறித்து நிதியிடம் கேட்டதற்கு, காதலா யார் சொன்னது, ராகுல் என் நல்ல நண்பர் மட்டுமே என்றார். இந்நிலையில் ராகுலின் பெயர் அதியாவுடன் அடிபடுகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!