புரத குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள் என்ன..?


நன்றாகத்தான் உணவு உட்கொள்கின்றேன் என்று கூறினாலும் சிலருக்கு புரதக் குறைபாடு இருக்கத்தான் செய் கின்றது. நல்ல புரத உணவு எடுத்துக் கொள்பவர்களுக்கும் புரதக் குறைபாடு ஏற்படத்தான் செய் கின்றது. புரதத்தினை உடல் ஏற்றுக் கொள் ளும்போது மட்டுமே புரத குறைபாடு தவிர்க்கப்படுகிறது. புரத குறைபாட்டின் சில அறிகுறிகளை காண்போம்.

* வயிற்று உப்பிசம், காற்று: ஒவ்வொரு உணவிற்குப் பின்னும் வயிறு உப்பிசமும், காற்றும் இருந்தால் உடல் புரதத்தினை உடைக்கும் என்ஸைம்களை உற்பத்தி செய்யவில்லை என்று பொருள்.

* மலச்சிக்கல்: தேவையான ஜீரண என்ஸைம்ஸ் உடலால் உற்பத்தி செய்யப்படவில்லை என்பதும் மலச் சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்.

* உங்கள் ஜீரண மண்டலம் சக்தி அற்றதாக இருக்கலாம்.

* படபடப்பு, சோகம், இவை யும் புரத குறைபாட்டி னை ஏற்படுத்த முடியும்.

* தைராய்டு, இன்சுலின் இன்னும் மற்ற ஹார்மோன்களின் குறைபாடு ஏற்படும் பொழுதும் புரத குறைபாடு காணப்படலாம்.

* தொடர்ந்து அதிக எடை கூடிக்கொண்டு இருந்தால் மருத்துவர் ஆலோசனையின் பேரில் புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* சருமம் நன்கு இருக்க, முடி நன்கு இருக்க புரதம் மிக அவசியம்.

* வயது கூடும் பொழுது தேவை யான அளவு புரதம் இருக்கின்றதா என மருத்துவரிடம் கேட்டறிய வேண்டும்.

* அசிடிடிக்காக அதிக அன்டாசிட் மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கு அதிக புரத குறைபாடு ஏற்படும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!