மீண்டும் ஏர்டெல்லை தூக்கி அடித்து ஜியோ! இந்த முறை எப்படி தெரியுமா?


போட்டி நிறுவனமான ஏர்டெல்லுக்கு, ஜியோ நிறுவனம் ஒரு கெட்ட செய்தியை கொடுத்துள்ளது.

ஆம், முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், புதுப்புது டேட்டா, வாய்ஸ் சேவைகளை அறிமுகம் செய்து வருவதால், ஏர்டெல் உள்ளிட்ட போட்டி நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்திக்க நேரிட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஏர்டெல் நிறுவனத்தின் வருமானம் வெகுவாக பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் வருமானம், ஜனவரி முதல் மார்ச் வரையான சென்ற காலாண்டில், 31.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக, தற்போது தகவல் கிடைத்துள்ளது. இது 1.82 சதவீதம் உயர்வாகும். இதன்படி, இந்திய தொலைத்தொடர்புத் துறையில் 2வது வருமானம் மிக்கதாக, ஜியோ மாறியுள்ளது.

இதுவரை 2வது இடத்தில் இருந்த ஏர்டெல் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அதேசமயம், வோடஃபோன்- ஐடியா நிறுவனம், முதலிடத்தில் உள்ளது. வரும் நாட்களில், ஜியோ நிறுவனம், தொலைத்தொடர்புத் துறையில் முதல் நிறுவனமாக மாறவும் வாய்ப்புள்ளதாக, சந்தை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.-Source: times.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!