வாய் விட்டு கேட்பார்… பக்தனை மிரட்டி காசு கேட்கும் கடவுள்..!


அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளையும் எந்தக் கடவுளும் கேட்கவில்லை. ஆனால் நாம் செய்கிறோம். எந்தக் கடவுளும் காசு கொடு என்றோ உண்டியலில் இவ்வளவு போடு என்றோ சொல்வதில்லை. ஆனால் இந்த கடவுள் கேட்பார். வாய் விட்டு கேட்பார். அதிகாரமாக கேட்பார். சமயங்களில் செல்ல மிரட்டலோடும் கேட்பார். அலட்டலின்றி கேட்பார். அவரிடம் இல்லையென்று சொல்லமுடியாது.

சிறு குழந்தைகள் கூட அவர் கேட்கும் தொகையை சந்தோஷத்தோடு கொடுத்துவிடுவார்கள். கோடிகளிலோ இலட்சங்களிலோ ஆயிரங்களிலோ அல்ல. ஒற்றைஅல்லது இரட்டை இலக்கத்தில். 2 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை தான் அவரது விருப்பம். இப்படி கேட்டு பெறும் கடவுள்வேறு யாரும் அல்ல. பாபாதான்.

தன் உடலை கூட சுகமாக வைத்திருக்க விரும்பாத இந்த பக்கிரி பாபாவுக்கு எதற்குஇவ்வளவு பணம் என்ற கேள்விக்கு கூட இடமளிக்காமல் வாங்கிய சில்லறைகளை பாக்கெட்டில் போட்டுவிட்டு அதையும் சேர வேண்டிய இடத்தில் சேர்த்துவிடுவார்.ஒருமுறை பக்தர் ஒருவர் பாபாவை தரிசிக்க ஷீரடி வந்திருந்தார். பாபாவை தரிசிப்பவர்களிடம் பாபா தட்சணை கொடு என்று கேட்டு வாங்குவதைப் பார்த்தார்.

நம்மிடமும் கேட்பாரே என்று தோன்றியது. உடனேதன்னிடமிருந்த 18 ரூபாய் பணத்தை மசூதியில் இருந்த கொலாம்பே என்பவரிடம்கொடுத்து விட்டு இதை வைத்திருங்கள். நான் பாபாவை தரிசனம் செய்த பிறகு வந்து வாங்கிக்கொள்கிறேன் என்றார். அவர் மனதில் பாபா தட்சணை கேட் டால் நம்மிடம் இல்லையென்று சொல்லிவிடுவோம் என்னும் எண்ணம் தோன்றியது.


பக்தர்களின் வரிசையில் வந்தவர்பாபாவை தரிசித்து விடைபெற எத்தனித்தார். உடனே பாபாவின் குரல் அவரை தடுத்தது. நில்.எனக்கு தட்சணை கொடுக்காமல் போக கூடாது என்றார்.என்னிடம் தான் பணம் இல்லையே என்றார் இவர். உன்னிடம் இல்லையென்று எனக்கும் தெரியும்.ஆனால்கொலாம்பேவை கை காட்டி அவனிடமிருந்து 2 ரூபாய் வாங்கி கொடு என்றார்.பணம் கொடுத்த பக்தனுக்கு ஆச்சரியமாகி விட்டது பாபாவிடம் எந்த மந்திரமும் தந்திரமும் பலிக்காது போல என்று எண்ணி ஓடிச்சென்று கொலம்பாவேயிடம் பணம் வாங்கி பாபாவிடம் கொடுத்து பாபாவிடம் மன்னிப்பு கேட்டார்.

கொலாம்பே அந்தபக்தனிடம் நான் பாபாவுக்காக மது குடிப்பதையே நிறுத்தி விட்டேன் தெரியுமா? அதனால் பாபா என்னிடம் தட்சணை கேட்பதேயில்லை என்றான் பெருமையாக. அடுத்த முறை கொலாம்பே பாபாவிடம் வந்தபோது பாபா அவனை நிறுத்தி எதுவும் இலவசம் கிடையாது. தட்சணை கொடு என்று நிறுத்தி வம்படியாக அவனிடம் இருந்து இரண்டு ரூபாயைப் பெற்றுக்கொண்டார்.

கொலாம்பே தரிசனம் முடிந்து விடைபெற்று திரும்பினான்.என்னிடம் பாபா தட்சணை கேப்பதில்லை என்று பெருமிதம் அடைந்தோமே ஆனால் மனிதர்களின் ஜம்பம் கடவுளிடம் செல்லாது போல என்று நினைத்தான். மீண்டும் பாபாவை சந்திக்கும் போது பாபா கூறினார். நீ எனக்காக மது அருந்துவதை நிறுத்தியது மகிழ்ச்சிதான். கெட்டதை விட்டொழித்தவர்களுக்கு சலுகை காட்டினால் நல்லவர்களுக்குஎன்ன கொடுப்பது என்றார்.

பாபாவின் பக்தர்கள் வரம் பெற்றவர்கள். பாபாவை நல்ல குருவாக,சிறந்த நண்பனாக எப்படி வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எதுவாகஇருந்தாலும் பாபாவுக்கு தேவை பக்தி அல்ல,அன்பும் நம்பிக்கையுமே.-Source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!