குளிர்காலத்தில் ஏன் கட்டாயம் இஞ்சி குளியல் முறையை செய்ய வேண்டும்? இத முதல்ல படிங்க.!


தற்போது டிடாக்ஸ் பாத்திங் என்றொரு முறை வெகு வேகமாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது. பேரைக் கேட்டதும் அது என்னவோ ஏதோவென்றும் நூற்றுக்கணக்கில் செலவாகும் என்றோ யோசிக்க வேண்டாம்.

மிக எளிதாக, வெறும் 5 ரூபாய் செலவுக்குள் இந்த டிடாக்ஸ் என்னும் இஞ்சிக்குளியலை முடித்து விடலாம்.

அப்படி இந்த குளியலில் என்ன இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள்?


டிடாக்ஸ் குளியல் என்பது இஞ்சி குளியல் முறை ஆகும். இந்த குளியல் முறையை பின்பற்றுவதால், உடலை தாக்கும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவதுடன், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, உடலில் உண்டாகும் அலர்ஜி, கருப்பை புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.


இஞ்சி குளியல் முறையை எப்படி செய்ய வேண்டும்?

1/2 கப் இஞ்சி அல்லது ஒரு மேஜைக்கரண்டி இஞ்சி பவுடர் மற்றும் 1 கப் பேக்கிங் சோடா ஆகிய இரண்டு பொருட்களையும், மிதமாக உள்ள வெந்நீரில் கலந்து, 15-20 நிமிடங்கள் வரை ஊறவைத்து, அந்த நீரில் குளிக்க வேண்டும்.

இந்த இஞ்சி குளியல் மேற்கொண்டு முடித்த, ஒரு மணி நேரத்திற்கு பின் அதிக அளவு வியர்வை வெளியேறும். எனவே இந்த குளியலை இரவில் எடுப்பது சிறந்தது. இதனால் சருமத் துளைகள் விரிவடையும். வழக்கம் போலக் குளிக்கலாம். ஆனால் இந்த இஞ்சிக்குளியலைச் செய்யும்போது சோப்பு மற்றும் ஷாம்புகளை பயன்படுத்தக் கூடாது.-Source:tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!