கண்ணாடி முன் நாக்கை நீட்டி இப்படி நில்லுங்க… இப்படி தெரிந்தால் ஆபத்தாம்..!


நம்முடைய உடலில் நாம் பெரிதாகக் கண்டுகொள்ளாத பகுதி என்றால் அது நாக்கு தான். தினமும் இரண்டு வேளை பல் துலக்கினாலும் நாக்கை சுத்தம் செய்வதில்லை. ஆனால் நாம் சாப்பிடும் ஒவ்வொரு பொருளையும் அதன் சுவை மாறாமல் நம்மை ரசித்து சாப்பிட வைப்பதும் நாக்கில் உள்ள சுவை நரம்புகள் தான்.

இனிமேலாவது உங்களுடைய நாக்கையும் கொஞ்சம் கவனியுங்கள். உங்களுடைய உங்களைப் பற்றிய நிறைய விஷயங்களை சொல்லும்.

உங்களுடைய நாக்கில் வெள்ளைநிறத்தில் ஏதேனும் படிந்திருந்தால் அதை அப்படியே சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அது உங்களுக்கு உங்களுடைய உடல்நலம் குறித்து பல அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

நாக்கில் பாலம்பாலமாக வெடித்து அங்காங்கே வெள்ளைநிறத்தில் கோடுகள் இருந்தால் அது உங்களுடைய உடலில் ஈஸ்ட் தொற்று இருப்பதற்கான அறிகுறியைக் குறிக்கும்.

நாக்கின் நுனிப்பகுதி நல்ல ரத்த சிவப்பு நிறத்தில் தடிப்புடன் காணப்பட்டால் அது தோல் புற்றுநோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம்.


நாக்கில் வெந்ததுபோலவும் கொப்புளங்கள் போலவும் இருந்தால் அது உங்களுடைய உடம்பில் ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகின்றன என்று அர்த்தம்

மலை முகடு போல பள்ளமும் மேடுமாக லேசாக வெடித்திருந்தால் பெரிதாக பயப்படத் தேவையில்லை. ஆனால் இதுவே வலியுடன் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

நாக்கில் சொரசொரப்பாகவும் சற்று வலியுடனும் இருந்தால் நீங்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சளி பிடித்திருந்தாலோ அல்லது அல்சர் இரந்தாலோ இதுபோன்ற அறிகுறிகள் இருக்கும்.-Source:tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!