ஒரே தொடர்ச்சியாக இருமல் வருகிறதா? வீட்டில் மிக எளிதாக இந்த மருந்தை தயார் செய்து குடிங்க!!


இருமல் சுவாசப் பாதையில் உண்டாகும் தொற்று அல்லது அலர்ஜியினால் உண்டாகும். அதனை கவனிக்காமல் விடும்போது நுரையீரலுக்கும் பரவி சளி அடைத்து இதனால் மூச்சிரைப்பு, சுவாச பாதிப்பு ஆகியவைகள் உண்டாகும். அந்த சமயத்தில் எதிர்ப்பை காட்டும் விதமாக அலர்ஜியை ஏற்படுத்தும் ஒருவகை ரத்த செல்கள் அலர்ஜியை உண்டாக்குகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் தொற்று ஏற்பட்டால் எளிதில் குணமடையாது. மருந்துக்கள் சாப்பிட்டாலும் குணமாகாமல் இருக்கும்.

உணவிலும் கவனம் :
ஒரு விஷயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் வெறும் மருந்துக்கள் தவிர உணவிலும் நீங்கள் கவனம் எடுத்துக் கொள்வது முக்கியம். சுடு நீரை குடிப்பது, மிளகு, பூண்டு, மஞ்சள்ஆகியவற்றை கட்டாயம் குளிர்காலத்தில் சேர்த்துக் கொள்வது அவசியம்.


வீட்டிலேயே தயாரிக்கப்படும் இருமல் மருந்து :
அதுதவிர இங்கே சொல்லப்போகும் இந்த மருந்து நிஜமாகவே உங்கள் இருமலை கட்டுப்படுத்தும் . வெறும் உண்ணும் உணவுப் பொருள்களால் செய்யப்படும் இந்த மருந்து உங்களுக்கு பக்க விளைவுகளை தராது. குழந்தைகளுக்கும் தரலாம். தேன், வாழைப்பழம், மற்றும் நீர் கலந்து செய்யப்படும் இந்த மருந்து உங்கள் நுரையீரலுக்கு மட்டுமின்றி, வயிற்றிற்கும் நன்மை தருகிறது.

இருமல் மருந்து செய்ய தேவையானவை :
சுடு நீர் – 400 மி.லி
வாழைப் பழம் – 2 பெரியது
தேன் – 2 டேபிள் ஸ்பூன்


தயாரிக்கும் முறை :
நன்றாக பழுத்த இரண்டு வாழைப் பழங்களை மசித்துக் கொள்ளுங்கள். மர ஸ்பூன் அல்லது கரண்டி கொண்டு மசிப்பது நல்லது. இதனால் பழம் பிரவுனாகாமல் தடுக்க முடியும். பின் அதில் நீரை ஊற்றி மூடிவைத்து அரை மணி நேரம் அப்படியே விடுங்கள்.

தயாரிக்கும் முறை :
நீர் குளிர்ந்த பின் தேனை அதில் ஊற்றவும். நன்றாக கலக்கவும். தேவைப்பட்டால் இந்த கலவையை வடிகட்டி குடிக்கலாம். அப்படியே குடித்தாலும் நல்லதுதான்.

எப்படி குடிக்க வேண்டும் :
இந்த கலவையை தினமும் 4 வேளைகளில் 100 மி.லி.அளவில்(1 கப் ) குடிக்க வேண்டும். இடைவெளி விட்டு 4 முறை குடியுங்கள். வெதுவெதுப்பாக்கி குடிக்கவும். தினமும் புதிதாக தயார் செய்து குடிக்க வேண்டும். குடிக்கும்போதே உங்களுக்கு பலன் தெரியும். குடித்து பாருங்கள்.-Source:tamil.boldsky

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!