இந்துக் கடவுள்களின் புகைப்படத்துடன் ஷூ- டாய்லெட் ஷீட்! அமேசானுக்கு கடும் எதிர்ப்பு..!


இந்துக் கடவுள்களின் புகைப்படத்துடன் காலணிகள் மற்றும் கழிவறை கால் மிதிகளை விற்பனை செய்யும் அமேசான் நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

உலக அளவில் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் விளங்குகிறது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் மூலமாக குண்டூசி முதல் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருட்கள் வரை விற்பனை செய்யப்படுகின்றன. உலகம் முழுவதும் அமேசான் நிறுவனத்திற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உண்டு.

இந்த நிலையில் அமெரிக்காவில் அமேசான் இணைய தளத்தில் இன்று விற்பனைக்கு பட்டியலிடப்பட்ட சில பொருட்கள் இந்துக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. கழிவறை கால்மிதிகள், டாய்லெட் ஷீட்கள் ஆகியவற்றில் இந்துக் கடவுள்களின் உருவத்துடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் உடனடியாக அமேசானை புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு இயக்கத்தை ட்விட்டரில் தொடங்கியுள்ளனர்.

மேலும் இந்து கடவுள்களை அவமதித்த அமேசான் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் செல்போனில் இருந்து அமேசான் நிறுவனத்தின் ஆப்பை டெலிட் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதனால் அமேசானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!