பிரபல நடன இயக்குனர் தற்கொலை! அதிர வைக்கும் காரணம்!


நடன இயக்குனரான பரத் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

பிரபல நடிகரும் இயக்குனரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்சின் குழுவில் இருப்பவர் பரத். பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாசின் குழந்தைகளுக்கும் இவர்தான் டான்ஸ் மாஸ்டர். 35 வயதான பரத் மாற்றுத்திறனாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிகர் லாரன்சுக்கு உதவியாளர் போலவும் செயல்பட்டு வந்தார். பரத் மாற்றுத் திறனாளியும் கூட.

சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் தனது நண்பர்களுடன் ஒரு வீட்டில் வசித்து வந்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றியிருக்கிறார். இந்த நிலையில் புதன்கிழமை அன்று இரவு தனது வீட்டில் தூக்குப் போட்டு பரத் தற்கொலை செய்து கொண்டார்.

பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்தும் முன்னேற முடியவில்லை மற்றும் தனக்கு யாரும் பெண் தரவில்லை என்கிற ஏக்கத்திலும் திருமணமாகாத விரக்தி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!