சீக்கிரமே குழந்தை பிறக்க வேணுமா..? மாதம் ஒருமுறையாவது நண்டு சாப்பிடுங்கள்…!


நண்டு உடலில் சூட்டை அதிகரிக்கும் என்று கூறி சிலர் தவிர்த்துவிடுவார்கள். ஆனால் நண்டில் மீனைப்போலவே ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

புரதம், ஒமேகா 3 பேட்டி ஆசிட், செலீனியம், வைட்டமின் பி2, காப்பர் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச் சத்துக்கள் அதிகளவில் உள்ளன. மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு.

நண்டில் அதிக அளவில் புரதச்சத்துக்கள் இருப்பதால், அனைத்து வயதினரும் இதனை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் தசைகளை வலுவூட்ட உதவுகிறது.


அதிக அளவிலான மினரல்ஸ், வைட்டமின் மற்றும் குறைந்த அளவிலான கொழுப்பு இருப்பதால் இதய நோய்களிலிருந்து காக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்படும் சேதத்தினை தடுக்க இதில் உள்ள செலீனியம் சத்து உதவுகிறது. இதில் உள்ள ரிபோபிளேவின் சத்து, ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் கண்கள், தோல் மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டினையும் ஊக்குவிக்கிறது.


பருக்கள் இருந்தால், நண்டுகளை சாப்பிடுங்கள். ஏனெனில் நண்டில் உள்ள ஜிங்க், எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்தும். இதனால் முகப்பருக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

கர்ப்பிணிகள் நண்டு சாப்பிடக்கூடாது. ஆனால் கருத்தரிக்க நினைக்கும் பெண்களுக்கு ஃபோலிக் மிகவும் இன்றியமையாதது. இந்த சத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தாலும், நண்டில் அதிகமாகவே உள்ளது. எனவே இதனை கருத்தரிக்க நினைக்கும் போது அவ்வப்போது எடுத்துக் கொள்வது நல்லது.

இதில் உள்ள மினரல்கள் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.


மேலும் கனிமச்சத்தான பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. நாம் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றுகிற திறன் கொண்டது.

சிறுநீரக செயல்பாடு சரியான முறையில் நடப்பதற்கு இது உதவுகிறது.-Source:tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!