இலங்கையில் 360ற்கும் மேற்பட்ட முகநூல் கணக்குகள் முடக்கம்…!!


ஏப்ரல்-21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வௌியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மதங்களுக்கிடையே முறுகல் நிலை ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்ட 360 இற்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இதுதொடர்பில் விசாரணை செய்யும் விசாரணைக் குழுவி​னரை மேற்கோள்காட்டி ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவற்றில் பெரும்பாலானவை தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுடையது என்பதும் தெரியவந்துள்ளது.சமூக வலைத்தளங்களூடாக தவறான பிரசாரங்களை பரப்புவோரைக் கண்டறிவதற்கு 24 மணிநேரக் கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகிறது.இவ்வாறான கணக்குகளை முடக்குவதுடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.-Source: newlanka

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!