இணையத்தில் வைரலாகும் 2018 நோக்கியா 6…!


எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் 2018 நோக்கியா 6 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் சீனாவின் சான்றளிக்கும் வலைத்தளத்தில் கசிந்துள்ளது.

எச்எம்டி குளோபல் நோக்கியா பிராண்டு ரீஎண்ட்ரியின் முதல் ஆண்டு விழாவை சமீபத்தில் கொண்டாடிய நிலையில், 2018-ம் ஆண்டின் முதல் வெளியீடு சார்ந்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சீனாவின் சான்றளிக்கும் வலைத்தளமான TENAA-இல் TA-1054 என்ற மாடல் எண் கொண்ட ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் கசிந்துள்ளது. பெரும்பாலும் இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 6 (2018) என்றே கூறப்படுகிறது.

முந்தைய முதல் தலைமுறை நோக்கியா 6 போன்றே புதிய ஸ்மார்ட்போனும் முதற்கட்டமாக சீனாவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

2018 நோக்கியா 6 ஸ்மார்ட்போன் பார்க்க நோக்கியா 7 போன்றே காட்சியளிக்கலாம் என்றும் புதிய 18:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்பசடுகிறது.


அந்த வகையில் இதன் கேபாசிட்டிவ் பட்டன்கள் ஆன்-ஸ்கிரீன் பட்டன்களாக மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் 2018 நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட், 4 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, டூயல் கேமரா அமைப்பு மற்றும் போத்தி அம்சம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் நோக்கியா 9 மற்றும் மற்றும் நோக்கியா 8 (2018) சீனாவில் ஜனவரி 19-ம் தேதி நடைபெறும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

2017 நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களில் தற்சமயம் பீட்டா டெஸ்டிங் செய்யப்படும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!