குறைந்த விலையில் புதிய6 சிறப்பம்சங்களுடன் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்…!


5.0 இன்ச் எச்டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 13 எம்பி பிரைமரி கேமரா கொண்ட இன்டெக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்டெக்ஸ் நிறுவனம் எலைட் சீரிஸ் புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய எலைட் இ6 ஸ்மார்ட்போன் 5.0 இன்ச் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர், ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டுள்ளது.

பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் இன்டெக்ஸ் எலைட் இ6 ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி 13 எம்பி பிரைமரி கேமரா, 4ஜி வோல்ட், உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.


இன்டெக்ஸ் எலைட் இ6 சிறப்பம்சங்கள்:

– 5.0 இன்ச் 1280×720 பிக்சல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் IPS டிஸ்ப்ளே
– 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737V பிராசஸர்
– மாலி-T720 GPU
– 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
– 8 எம்பி செல்ஃபி கேமரா, ஃபிளாஷ்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4000 எம்ஏஎச் பேட்டரி

கருப்பு நிறத்தில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இன்டெக்ஸ் எலைட் இ6 ஸ்மார்ட்போன் விற்பனை டிசம்பர் 15-ம் தேதி முதல் துவங்குகிறது. இந்தியாவில் இன்டெக்ஸ் எலைட் இ6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!