செக்ஸ் தொடர்பான வார்த்தைகளுக்குத் ட்விட்டரில் தடை…!!


செக்ஸ் சம்பந்தமான ஹேஷ்டேக் மூலம் புகைப்படங்களைத் தேட ட்விட்டர் தடை போட்டிருக்கிறது.

பாலியல் தொடர்பான பதிவுகளைக் கட்டுப்படுத்தும் விதமாக ட்விட்டர் பல்வேறு கெடுபிடிகளை கடைபிடிக்கிறது. ஹேஷ்டேக் பயன்படுத்தும்போது பாலியல் தொடர்பான வார்த்தைகள் பரிந்துரைகளில் (Suggestions) இடம்பெறுவதில்லை. அந்த வார்த்தைகளை ஹேஷ்டேகாக பயன்படுத்தி ட்வீட் செய்யலாம்.

ஆனால், இப்போது அவ்வாறு பாலியல் தொடர்பான ஹேஷ்டேக் பயன்படுத்த பதிவிட்ட புகைப்படங்களை கண்டுபிடிக்க தடை போட்டப்பட்டுள்ளது. பல்வேறு பாலியல் சார்ந்த ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் புகைப்படங்களைத் தேடினால் ‘நீங்கள் தவறான வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறீர்கள்’ என்று செய்தி தோன்றுகிறது.

அதாவது, bisexual, butt, boobs, vagina, clitoris,bisexual, penis போன்ற வார்த்தைகளைப் போட்டு ட்விட்டரில் புகைப்படங்களைத் தேடினால் ஒன்றும் கிடைக்காது. vulva, breast, nipple, whitepride போன்ற வார்த்தைகள் இன்னும் தடை செய்யப்படவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!