பேனாவின் மூடியில் ஒரு ஓட்டை இருக்குமே அதை கவனித்திருக்கிறீர்களா? அப்ப இத முதல்ல படிங்க!


நாம் எல்லா விஷயத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டே தான் இருக்கிறோமா? ஆம்…. கவனிக்காமல் எப்படி இருப்போம் என்ற அவசரப்படாதீர்கள். ஆண்டாண்டு காலமாக அப்படியே தான் இருக்கிறது. அதற்கான காரணம் தெரியாமல் அப்படியே நாங்களும் பயன்படுத்துகிறோம் என்று சமாதனப்படுத்திக் கொள்ள தயாராகுங்கள். ஏனென்றால் அப்படியான ஒரு கேள்வி தான் அடுத்ததாக உங்களை நோக்கி வரப்போகிறது.

எல்லாருமே…. கிட்டத்தட்ட உட்காரத்தெரிந்த ஆறு மாதக் குழந்தையிலிருந்தே கூட இதனை பயன்படுத்துவார்கள் என்று சொல்லலாம்…. அதென்ன ஆறு மாதக் குழந்தையிலிருந்து எல்லாம் பயன்படுத்தக்கூடிய பொருள். பேனா, நினைவில் இருக்கிறதா? நீங்கள் எப்போது முதன் முதலாக பேனாவில் எழுதினீர்கள் என்று ?

தொண்ணூறுகளில் எல்லாம் மூன்றாம் வகுப்பிலிருந்து தான் பேனா. இரண்டாயிரம்களில் ஒன்றாம் வகுப்பிலிருந்து என்றானது. தற்போது எல்லாம் ப்ளே ஸ்கூலுக்கு போகும் போதே இரண்டு பேனாக்களை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்கிறார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம். நீங்கள் பயன்படுத்தும் பேனாவின் மூடியில் ஒரு ஓட்டை இருக்குமே அதை கவனித்திருக்கிறீர்களா?


பேனாவின் மூடியில் அப்படியான ஓட்டை இருப்பதால் பேனாவின் இங்க் வேகமாக காய்ந்து விடுகிறது. இதனால் நாம் எழுத முற்படும் போது சில நேரங்களில் எழுதாமல் வீம்பு செய்யும். சில இடங்களில் வேகமாக கிறுக்கிப் பார்த்தால் அது நார்மலாக எழுத ஆரம்பித்திடும்.

சிலர் இதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள் தெரியுமா? இப்படி மூடியில் ஓட்டை இருப்பதினால் இங்க் வேகமாக கரையும். அல்லது இங்க் உறைந்து போய் பேனா எழுதாமல் போய்விடும்.

அதனால் ஒரு வாரத்தில் தீர வேண்டிய இங்க் மூன்று அல்லது நான்கு நாட்களிலேயே தீர்ந்திடும் இதனால் சீக்கிரம் இன்னொரு பேனா வாங்க வைப்பதற்காக இப்படியான ஓட்டை இருக்கிறது என்றும் ஒரு பேச்சு உண்டு.

இதைத் தாண்டி சொல்லக்கூடிய இன்னொரு காரணம், பேனாவின் மூடியில் இருக்கக்கூடிய ஓட்டையினால் தான் அதனை நாம் எளிதாக திறந்து மூட முடிகிறது. காற்று வந்து செல்லக்கூடியதாக இருப்பதால் சீரான பிரஷர் இருக்கும். இது பேனாவின் மூடியை திறக்கும் போது எளிதாக திறக்க முடிகிறது.

அதை விட சிலருக்கு ஏன் பெரும்பாலானோருக்கு இந்தப்பழக்கம் இருக்கிறது. எதாவது யோசிக்கும் போதோ அல்லது தீவிரமாக எழுதும் போதோ மெய்மறந்து பேனாவை கடிப்பது, பேனாவின் மூடியை வாயில் வைத்து கடிப்பது என்று செய்வோம்.

ஒரு கணம்? அந்த மூடியை முழுங்கிவிட்டால்….


பேனா மூடியில் ஒட்டை இருப்பதற்கு உண்மையான காரணம் அதை விட முதன் முதலாக இதை யோசித்து தான் பேனாவின் மூடியில் ஓட்டை போட்டிருக்கிறார்கள்.

மிகவும் பழமையான அதே சமயம் மிகவும் பிரபலமாக இருக்கும் பால் பாயிண்ட் பேனா நிறுவனங்களில் ஒன்று பிக் க்ரிஸ்டல். இவர்கள் தான் முதன் முதலாக பேனாவின் நுனியில் ஓட்டை போட்டு ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.

இதற்கு அவர்கள் விளக்கி காரணம் தான் ஹைலைட்! பொதுவாக பேனா மூடியை எல்லாருக்கும் வாயில் வைக்கும் பழக்கம் இருக்கிறது. இதனை குழந்தைகளும் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு வேளைத் தப்பித் தவறி இதனை குழந்தை முழுங்கிவிட்டால்?


அது மூச்சுக்குழாயில் அடைத்து தொந்தரவைக் கொடுக்கும் என்றாலும் அவசர சிகிச்சை அளிக்க, உடனடியாக மருத்துவமனை செல்ல சில நிமிட அவகாசமாவது வேண்டுமல்லவா அதற்காகத் தான் இந்த யோசனை.

பேனா மூடியில் இருக்கிற சிறு துளை வழியாக மூச்சுக்காற்றினை நம்மால் சுவாசிக்க முடியும். அதற்குள் நாம் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்லலாம்.

இதே அந்த ஓட்டை இல்லை என்றால்? பேனா மூடிய விழுங்கிய ஒரு நிமிடத்தில் மரணம் நிச்சயம்.-Source: tamil.boldsky

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!