பிரபல சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின் திடீர் மரணம்.. சகோதரன் உருக்கம்..!


அமெரிக்காவின் பிரபல இளம் சைக்கிள் பந்தய வீராங்கனையான கெல்லி கேட்லின், திடீரென மரணம் அடைந்த சம்பவம் விளையாட்டு வீரர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இளம் சைக்கிள் பந்தய வீராங்கனையான கெல்லி கேட்லின், 2016ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க அணிக்காக களமிறங்கி வெள்ளிப் பதக்கம் வென்றுஅசத்தினார். இது தவிர 2016 முதல் 2018ஆம் ஆண்டுக்குள் நடைபெற்ற உலகக்கோப்பை சைக்கிள் தொடரில் தொடர்ச்சியாக அமெரிக்க அணி மூன்று முறை கோப்பையை கைப்பற்ற பெரிதும் உதவினார்.

அமெரிக்காவின் மின்னோஸ்டா நகரைச் சேர்ந்த கேட்லின், படிப்பிலும் வல்லமை மிக்கவராக இருந்துள்ளார். இதுதவிர வயலின் வாசிப்பதையும் கற்றுள்ளார்.

இந்நிலையில், அவரது சகோதரர் கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது தங்கை இறந்துவிட்டார் என ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அமெரிக்க சைக்கிளிங் தலைவர் தற்போது உறுதிசெய்துள்ளார்.

அமெரிக்க சைக்கிளிங் கமிட்டி கேட்லியின் இறப்புக்கு வருந்துவதாகவும், அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது அணியினருக்கு தங்களது இரங்கலை தெரிவிப்பதாகவும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். கேட்லியின் இறப்புக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.
இளம் வீராங்கனை ஒருவர் திடீரென இறந்திருப்பது அமெரிக்க தடகள விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.-Source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!