மாதவிடாய் நாட்களில் டென்ஷனா? அப்ப இதப் பண்ணுங்க..!


திடீர்னு கோபம், அளவுக்கதிகமான பசி, உள்ளுக்குள்ள ஒரு பதட்டம், நாம ஏன் இப்படி பண்றோம்? இந்த மாறி கேள்வியெல்லாம் உங்களுக்குள்ள வந்திருக்கா? அப்ப இதுவா இருக்கலாம்.

மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் பெரும்பாலான பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனை தான் உங்களுக்கும். PMS எனப்படுகிற ப்ரீமென்ஸ்ட்ரல் சிண்ட்ரோம் (Premenstal Syndrome) தான் உங்கள இம்ச பண்ணுது. கடந்த வருடம் தேசிய ஆரோக்கிய இணையதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியாவில் 91 சதவிகித பெண்கள் மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் மூட் ஸ்விங், உடல் வலி, மன உளைச்சல், தற்கொலை எண்ணம் ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றினை எதிர்கொள்வதாக கூறியுள்ளனர்.

மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கம் அனைத்தும் மாறிப் போனதால் பல்வேறு புதிய பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர். இந்த ப்ரீமென்ஸ்ட்ரல் ஸ்ட்ரெஸ்சை விரட்ட இதுதான் வழி.

உடற்பயிற்சி

நிறைய உடற்பயிற்சி செய்யுங்க. நீச்சல், ஜும்பா, டான்சிங், வேகமான நடைப் பயிற்சி இப்படி ஏதாவது ஒன்றை செய்யுங்கள். மனதை புத்துணர்வாக வைக்க கூடிய நடனத்துடன் கூடிய உடற்பயிற்சி செய்யுங்க.


உணவுமுறை

எப்பவும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களையே கடைபிடியுங்க. கார்போ ஹைட்ரேட் அதிகமாக இல்லாம நிறைய நார்ச்சத்துகள் உள்ள உணவுகள் சிறந்தவை.

கொஞ்சம் ரிலாக்ஸ்

வடிவேலு சொல்றா மாறி சும்மா இருக்கிறது ரொம்ப கஷ்டம்தான். ஆனா சில சமயங்களில் அமைதியாக இருங்கள். அதுதான் உடலுக்கு நல்லது. மாதவிடாய்க்கு முன்பு வருகிற டென்ஷன குறைக்க முதல் வழி டென்ஷன் இல்லாம சும்மா இருப்பதுதான். எனவே சும்மா இருங்க. யோகா, ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி, தியானம் இதுவும் ரிலாக்ஸ் பண்ண உதவும்.

நொறுக்குத் தீனிக்கு ‘நோ’

மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் அதிகமான ஆரோக்கியமில்லாத உணவுகளான பாஸ்ட் புட் உணவுகள் மீதோ, தின்பண்டங்கள் மீதோ அதிக விருப்பம் ஏற்படும். அதையெல்லாம் அறவே தவிர்த்துவிடுதல் சிறப்பு. இதையெல்லாம் முயற்சி செய்து ‘சூப்பர் வுமன்’ என்ற பட்டத்தை வெல்ல வாழ்த்துகள் தோழிகளே.-Source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!