வெள்ளை நிற ஜீன்ஸைப் இப்படி பராமரித்தால் எப்பவும் புதுசுபோலவே ஜொலிக்கும்…!


வெள்ளை நிற ஆடைகள் எப்போதுமே ஒருவித கம்பீரத்தையும் பெருமையையும் உண்டாக்கக்கூடியதாக இருக்கும். வெள்ளை நிற ஆடைகளை விரும்பாதவர்களே இருக்கமாட்டார்கள். ஆனால் வெள்ளைநிற ஜீன்ஸை பெரிதாக நாம் வாங்குவதில்லை. அதற்குக் காரணம் அதன் பராமரிப்பு தான்.

ஃபார்மல் பேண்ட்களைப் பராமரிக்க முடியாமல் தான் பெரும்பாலானோர் ஜீன்ஸ்க்கு மாறிவிட்டனர். இதில் ஜீன்ஸிலும் ஒயிட் கலர் என்றால் அவ்வளவு தான். ஆனால் ஒயிட் ஜீன்ஸ் அணிவதற்கும் ஒரு தில் வேண்டும் தான்.


அணிவதற்கு இருக்கும் துணிச்சல் அதைப் பராமரிப்பதிலும் இருக்க வேண்டும். வெள்ளை நிற ஜீன்ஸைப் பராமரிக்க சில வழிகள் உண்டு. அதைப் பின்பற்றினால் எப்போதும் புதுசுபோலவே இருக்கும் உங்கள் ஒயிட் ஜீன்ஸ்.

மற்ற துணிகளை விட மெஷினில் துவைக்கும்போது கொஞ்சம் டெம்பரேச்சர் அளவை அதிகமாக வைத்துத் துவைக்க வேண்டும். டிரையரிலும் அதேபோலத்தான்.

வெள்ளை ஜீன்ஸை உலர்த்தும்போதோ ஹேங்கரில் மாட்டும்போதோ தொங்கவிடக் கூடாது. ஒயிட் ஜீன்ஸை கிடைமட்டமாகக் கீழே கிடத்தி உலர்த்த வேண்டும்.


உலர வைத்து எடுத்ததும் அயர்ன் செய்திடுங்கள். கறைகள் ஏதேனும் இருந்தால் சுருக்கங்களுக்கிடையில் அப்படியே இருக்கும். அயர்ன் செய்தால் தான் அடுத்தடுத்து துவைக்கும் பொழுது எளிமையாக இருக்கும்.

ஒயிட் ஜீன்ஸைத் துவைக்க வெதுவெதுப்பான நீரையே பயன்படுத்துங்கள். வெதுவெதுப்பான நீர் அழுக்கு, கிருமி மற்றும் தூசிகளை எளிமையாகப் போக்கிவிடும்.

ஒயிட் ஜீன்ஸ் பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தியும் துவைக்கலாம்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!