இந்த அம்சம் 2018 சோனி ஸ்மார்ட்போன்களில் நிச்சயம் இடம்பெறும்?


சோனி நிறுவனத்தின் 2018 ஸ்மார்ட்போன்களில் தற்போதைய டிரென்ட் செட்டிங் டிஸ்ப்ளே வழங்கப்படும் என சமீபத்திய தகவல்களில் தெரியவந்துள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையில் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் பெசல்-லெஸ் மற்றும் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே பெரும்பாலும் வழங்கப்பட்ட அம்சமாக இருந்துள்ளது.

பல்வேறு நிறுவனங்கள் புதிய வழக்கத்தை பின்பற்றத் துவங்கிய நிலையில் சோனி நிறுவனம் பெரிய பெசல்கள் நிறைந்த சாதனத்தையே வெளியிட்டது.

எனினும் இந்த வழக்கம் விரைவில் மாற்றப்பட்டு அடுத்த ஆண்டு வாக்கில் சோனி வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போன்களில் பெசல் லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


அந்த வகையில் 2018-ம் ஆண்டில் வெளியாக இருக்கும் இரண்டு எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்களில் பெசல்-லெஸ் டிரென்ட் பின்பற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களின் படி மெல்லிய பெசல்கள் கொண்ட எக்ஸ்பீரியா ஃபிளாக்ஷிப் மற்றும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்களில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஃபிளாக்ஷிப் எக்ஸ்பீரியா மாடலில் கூர்மையான முனைகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இத்துடன் முன்பக்கம் டூயல் ஸ்பீக்கர், டூயல் பிரைமரி கேமரா மற்றும் 4K தரம் கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


மேலும் கைரேகை ஸ்கேனர் டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் ரக எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போனில் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு மற்றும் பின்புறம் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மற்ற எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்களில் டூயல் ஸ்பீக்கர், டூயல் பிரைமரி கேமரா, 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

சோனி ஸ்மார்ட்போன்களின் முதற்கட்ட ரென்டர்கள் மட்டும் வெளியாகியுள்ள நிலையில், வரும் நாட்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சோனி ஸ்மார்ட்போன்களில் ஒரே சாதனம் மட்டுமாவது பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

முன்னதாக இணையத்தில் கசிந்த ஸ்பெக் ஷீட் தகவல்களின் படி சோனி H854 என்ற குறியீட்டு பெயர் கொண்ட சாதனத்தில் 5.7 இன்ச் 4K HDR டிஸ்ப்ளே, 3420 எம்ஏஎச் பேட்டரி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, ப்ளூடூத் 5.0, ஜி.பி.எஸ்., யுஎஸ்பி டைப்-சி போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும் புதிய ஸ்மார்ட்போன்கள் சார்ந்து சோனி சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!