ஏர்டெல் – இன்டெக்ஸ் நிறுவனங்களின் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன்கள்…!


கார்பன் மற்றும் செல்கான் நிறுவனங்களை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் இன்டெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன.

இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் N1, அக்வா A4 மற்றும் அக்வா S3 என மூன்று மாடல்களை முறையே ரூ.1,649, ரூ.1,999 மற்றும் ரூ.4,379 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மூன்று ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் மற்றும் 4ஜி வோல்ட்இ வசதி கொண்டிருக்கிறது.


இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் N1 சிறப்பம்சங்கள்:

– 4.0 இன்ச் WVGA 480×800 பிக்சல் டிஸ்ப்ளே
– 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
– 1 ஜிபி ரேம்
– 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.0
– 2 எம்பி பிரைமரி கேமரா
– 0.3 எம்பி செல்ஃபி கேமரா
– 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைபை
– 1400 எம்ஏஎச் பேட்டரி

இன்டெக்ஸ் அக்வா A4 சிறப்பம்சங்கள்:

– 4.0 இன்ச் WVGA 480×800 பிக்சல் டிஸ்ப்ளே
– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர்
– 1 ஜிபி ரேம்
– 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.0
– 5 எம்பி பிரைமரி கேமரா
– 2 எம்பி செல்ஃபி கேமரா
– 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைபை
– 1750 எம்ஏஎச் பேட்டரி


இன்டெக்ஸ் அக்வா S3 சிறப்பம்சங்கள்:

– 5.0 இன்ச் 1280×720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே
– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர்
– 2 ஜிபி ரேம்
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.0
– 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
– 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
– 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைபை
– 2450 எம்ஏஎச் பேட்டரி

ஏர்டெல் மற்றும் இன்டெக்ஸ் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள மூன்று ஸ்மார்ட்போன்களுடன் ஏர்டெல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் ரூ.169 ரீசார்ஜ் செய்து அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 0.5 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் N1 ஸ்மார்ட்போன் வாங்க ரூ.3,149, இன்டெக்ஸ் அக்வா A4 வாங்க ரூ.3,499 மற்றும் இன்டெக்ஸ் அக்வா S3 வாங்க ரூ.5,879 செலுத்த வேண்டும்.

இத்துடன் மாதம் குறைந்தபட்சம் ரூ.169 செலுத்தி தொடர்ச்சியாக 36 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது 18 மாதங்கள் நிறைவுற்றதும் ரூ.500 கேஷ்பேக் மற்றும் 36 மாதங்கள் நிறைவுறும் போது ரூ.1,000 கேஷ்பேக் பெற முடியும்.

அந்த வகையில் ஸ்மார்ட்போன் வாங்க செலுத்திய தொகையில் ரூ.1,500 வரை திரும்ப பெற முடியும். ரூ.169 திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பாதவர்கள் முதல் 18 மாதங்களில் ரூ.3000 மதிப்புள்ள ரீசார்ஜ்களை செய்து ரூ.500 தள்ளுபடியும், அடுத்த 18 மாதங்களில் ரூ.3000 வரை ரீசார்ஜ் செய்து ரூ.1,000 திரும்ப பெற முடியும். – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!