இந்தியாவில் ஒன்பிளஸ் 5வு ஸ்டார் வார்ஸ் எடிஷன் அறிமுகம்…!


இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு விழாவை முன்னிட்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் வெளியாக இருக்கும் ஹாலிவுட் திரைப்படமான ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜெடி திரைப்படத்துடன் இணைந்து ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் டீசர் முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற காமிக் ஆன் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

டிசம்பர் 14-ம் தேதி மும்பையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள விழாவில் ஒன்பிளஸ் 5T அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான நுழைவு சீட்டுகள் டிசம்பர் 7-ம் தேதி காலை 10.00 மணி முதல் ரூ.999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

லிமிட்டெட் எடிஷன் ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் அமேசான், ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் மையங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் விலை மற்றும் மாடல்கள் குறித்த விவரம் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் டிசம்பர் 15-ம் தேதி வெளியிடப்படுகிறது.


ஒன்பிளஸ் 5T பின்புறம் வெள்ளை நிறமும், ஸ்டார் வார்ஸ் லோகோவும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இடது புறத்தில் அலெர்ட் ஸ்லைடர் மற்றும் சிவப்பு நிறம் கொண்டுள்ளது.

இத்துடன் ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் அதிகாரப்பூர்வ டீசர் வீடியோ யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பை தவிர மற்ற சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 5T சிறப்பம்சங்கள்:

– 6.01 இன்ச் 2106×1080 பிக்சல் ஃபுல் எச்டி+ ஆப்டிக் AMOLED 2.5D வளைந்த டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் 10nm பிராசஸர்
– அட்ரினோ 540 GPU
– 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபிஇன்டெர்னல் மெமரி
– ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த ஆக்சிஜன்ஓ.எஸ். 4.7, ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், சோனி IMX398, f/1.7 அப்ரேச்சர், 1.12μm பிக்சல்
– 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், சோனி IMX376K, 1.0μm பிக்சல்
– 16 எ்மபி செல்ஃபி கேமரா, சோனி IMX371 சென்சார், 1.0μm பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
– கைரேகை ஸ்கேனர்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3300 எம்ஏஎச் பேட்டரி, டேஷ் சார்ஜ்

ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இவை முறையே ரூ.32,999 மற்றும் ரூ.37,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. முன்னதாக ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் லாவா ரெட் நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ டீசர் வீடியோவினை கீழே காணலாம். – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!