குளத்தில் குளிக்கச் சென்ற ஐய்யப்ப பக்தர்கள் அதிர்ச்சியில்…!


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொடுவாயூர் பூசாரிமேடு பகுதியை சேர்ந்தவர் ரதீஷ் (37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி (வயது 33).

இவர்களது மகள்கள் ஸ்ரீலட்சுமி (7), ஸ்ரீலேகா (5). மகள்கள் இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ரதீஷ் மற்றும் மனைவி, குழந்தைகள் படுத்து தூங்கினர்.

ரதீஷ் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து ரதீஷ் புதுநகரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய் மற்றும் குழந்தைகளை தேடி வந்தனர்.


இந்நிலையில் நேற்று அய்யப்ப பக்கதர்கள் ரதீஷ் வீட்டருகே இருந்த குளத்தில் குளித்தனர். அப்போது தண்ணீருக்கு அடியில் இருந்து 3 உடல்கள் மெல்ல மெல்ல மேலே வந்தன.

சுடிதார் துப்பட்டாவால் இளம்பெண் உடலுடன் 2 பெண் குழந்தைகள் உடல்கள் கட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அய்யப்ப பக்தர்கள் புதுநகரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு சோதனை நடத்தினர். அப்போது மாயமான ரதீசின் மனைவி பத்மாவதி மற்றும் அவரது குழந்தைகள் என்பது தெரியவந்தது.

மேலும் பத்மாவதி 2 குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்று விட்டு பின்னர் தானும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


இது குறித்து ரதீஷ் மற்றும் பத்மாவதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

பத்மாவதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ரதீஷ் வரதட்சணை கேட்டு அடிக்கடி பத்மாவதியை கொடுமைபடுத்தி வந்தார். இதனை பல முறை எங்களிடம் பத்மாவதி கூறி அழுதார்.

நாங்கள் மகளை சமாதானப்படுத்தியும் ரதீசுக்கு அறிவுரையும் கூறி வந்தோம். ஆனால் அவர் தொடர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார்.

வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் இரு மகள்களுடன் பத்மாவதி குளத்தில் குத்தித்து தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ரதீஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். மீட்கப்பட்ட உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!