கண் இமைகளில் வரும் பருக்களை விரட்டியடிக்க இதோ எளிய வீட்டு வைத்திய முறைகள்..!


முகப் பருக்கள் என்றதும் முகஞ் சுழிக்காதவர்களே இல்லை என்று தான் கூற வேண்டும். பொதுவாக முகத்தில் தோன்றும் பருக்களால் தோல் சுகாதாரம் கெடுவதோடு முகத்தின் அழகும் குன்றிப் போகும். இந்த பருக்கள், உடம்பின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம்.

அந்த வகையில் கண் இமைகளின் மீது தோன்றும் பருக்களானது மிகவும் அசௌகரியத்திற்கு இட்டுச் செல்வதோடு அன்றாட கருமங்களை செவ்வனே செய்வதற்கும் முட்டுக் கட்டையாய் அமைந்து விடுகின்றது.

எனினும், இந்த பிரச்சினைக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே தீர்வு காண முடியும். அவை என்ன என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

01. சூடான அழுத்தம்
தூய்மையான துணி துண்டு ஒன்றை எடுத்து அதனை இளஞ் சூடான தண்ணீரில் நனைத்து பின்பு அதனை நன்கு பிழிந்த பின்னர் அந்த துணியை பாதிக்கப்பட்ட இடத்தில் 5 நிமிடங்களுக்கு வைத்திருக்க வேண்டும். நாளொன்றுக்கு 3 – 4 தடவைகள் இவ்வாறு செய்வதன் மூலம் கண் இமைகளில் தோன்றும் பருக்கள் மறையும்.

02. கிறீன் டீ
கிறீன் டீயை ஒன்றை எடுத்து அதனை இளஞ் சூடான நீரில் நனைத்துக் கொள்ள வேண்டும். 5 நிமிடங்களுக்குப் பின்னர் அதனை தண்ணீரில் இருந்து எடுத்து கண் இமைகளில் ஒற்றிக் கொள்ள வேண்டும். 5 – 10 நிமிடங்கள் இவ்வாறு வைத்திருப்பது சிறந்தது. நாளொன்றுக்கு 2 தடவைகள் இவ்வாறு செய்வது சிறந்தது.


03. மஞ்சள்
ஒரு கோப்பை சூடான தண்ணீரில் மஞ்சள் தூள் சிறிதளவை இட்டு அதனை நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிதளவை பஞ்சு ஒன்றின் உதவியுடன் தொட்டு அதனை 3 – 4 நிமிடங்களுக்கு கண்களின் மீது வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் கண் இமைகளில் வரும் பருக்கள் மறையும்.

04. கற்றாளைச் சாறு
கற்றாளைச் சாறை வெட்டி எடுத்து அதை பஞ்சொன்றில் தொட்டு பருக்கள் உள்ள பகுதியில் 5 நிமிடங்களுக்கு ஒற்றி எடுக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். நாளொன்றுக்கு 2 – 3 தடவைகள் இவ்வாறு செய்வது உத்தமம்.

05. கொத்தமல்லி விதைகள்
இரண்டு கோப்பைத் தண்ணீரை எடுத்து அதில் ஒரு கைப்பிடி கொத்தமல்லி விதைகளை இட வேண்டும். பின்னர் 5 – 10 நிமிடங்களுக்கு அதனை கொதிக்க விடவும். பின்னர் அதனை ஆற விட்டு ஆறிய பின்னர் கண்களில் ஒற்றிக் கொள்வது நல்லது.

06. கொய்யா இலைகள்
ஒரு கோப்பைத் தண்ணீரை எடுத்து அதில் சிறிதளவு கொய்யா இலைகளை இட்டு 5 – 10 நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் ஆறியதும், அந்தக் கலவையை துணித் துண்டு ஒன்றால் நனைத்து பரு உள்ள இடத்தில் பூச வேண்டும். நாளொன்றுக்கு இரண்டு முறை இவ்வாறு செய்ய வேண்டும்.

குறிப்பு: கண் இமைகளின் பரு உள்ள பகுதியில் அதிகபடியான வலி அல்லது எரிச்சல் ஏற்படின் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தீர்வு காண முற்படுவதற்கு முன்னர் உடனடியாக வைத்தியரிடம் செல்வது சிறந்தது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!