இந்தியாவில் ஆப்பிள் வருவாய் அதிகரிப்பு: டிம் குக் அறிவிப்பு


ஆப்பிள் நிறுவனத்தின் 2017 நான்காம் காலாண்டு வருவாய் அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதன்படி இந்தியாவில் ஆப்பிள் நிறுவன வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்கு அதிகரித்து இருக்கிறது.

இந்தியவில் ஆப்பிள் நிறுவன வருவாய் அதிகரிக்க உள்நாட்டு தயாரிப்பு, ஐபோன்களின் விலை குறைப்பு மற்றும் ஆப்பிள் விற்பனை மையங்களை அதிகரித்ததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையை நன்கு புரிந்து கொண்ட காரணத்தால், விற்பனைியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, எனினும் தொடர்ந்து முன்னேற்றம் பெற வேண்டும் என டிம் குக் தெரிவித்துள்

கடந்த ஆண்டுடன ஒப்பிடும் போது ஆப்பிள் நிறுவன வருவாய் 12 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி ஆப்பிள் நிறுவனம் 5260 கோடி அமெரிக்க டாலர்களை வருமானமாக பெற்றுள்ளது. தொழில்நுடப் சந்தை வல்லுநர்களின் படி ஆப்பிள் நிறுவன வருவாய் 4690 கோடி அமெரிக்க டாலர்களாக இருக்கும் என கணிக்கப்பட்டது.


இந்தியாவில் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள், ஆப்பிள் வாட்ச் 3, ஆப்பிள் டிவி 4K உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து ஆப்பிள் வருவாய் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் ஏற்கனவே ஐபோன் X விற்பனை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

2017 நான்காம் காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 4.67 கோடி ஐபோன்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட மும்மடங்கு அதிகம் ஆகும். இந்தியா, மெக்சிகோ, சீனா மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா உள்ளிட்ட சந்தைகளில் ஐபோன்களின் வருவாய் இருமடங்கு அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக ஆப்பிள் நிறுவனத்தின் லுகா மேஸ்ட்ரி தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!