குளிர் காலத்தில் மூக்கின் இரு பக்கங்களிலும் ஏன் தோல் உரிகிறது தெரியுமா..?


சிலருக்கு மூக்கைச் சுற்றி தோல் உரிவது சாதாரணமானதே. குறிப்பாக குளிர் காலத்தில் இவ்வாறு ஏற்படுகின்றது. இதற்கு காரணம் சருமம் உலர்வடைதலே.

தோல் உரிவதற்கு காரணம் குளிர் காலத்தில் சருமம் உலர்வடைவது மட்டுமல்ல, அழகு சாதன பொருட்கள், சோப் போன்றவற்றின் அதிக பயன்பாடு வயதடைவதனால் செபேசியஸ் சுரப்பியில் மாற்றங்கள் ஏற்படுதல், காலநிலை மாற்றங்கள், சில மருந்துகலின் பயன்பாடு போன்றவற்றாலும் சருமம் உலர்வடைகின்றது.

இதற்கு சரியான முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமானது. ஆனால் இதற்காக மருந்துகளை தேடுவதை விடுத்து வீட்டிலேயே இயற்கை முறையில் சிறந்த தீர்வைப் பெற முடியும்.

1. சருமத்தை தேய்ப்பதை தவிர்த்தல்.
ஏற்கனவே சருமம் உலர்ந்த நிலையில் இருக்கும் போது மேலும் அதனை தேய்ப்பதனால் எரிச்சலும், இரத்தக் கசிவும் ஏற்படும். அதற்கு பதிலாக சருமத்தில் கடி ஏர்படும் போது ஜஸ் கட்டிகளை வைத்து தீர்வைப் பெறுவது மிகவும் சிறந்தது.

2. சரியான சன் கிறீமை பயன்படுத்தல்:
சன் கிறீமை எப்பொது பயன்படுத்துவது அவசியம். சருமம் உலர்வடைந்து இருப்பதனால் அல்ககோல் உள்ள சன் கிறீமை தவிர்த்து, கற்றாளை, ஒலிவ் உள்ள சன் கிறீமை பயன்படுத்துவது சிறந்தது.

3. இறந்த கலங்களை நீக்குதல்.
சரும ஈரப்பதத்தை பேணுவதற்கு இறந்த கலங்களை நீக்குதல் மிகவும் அவசியமானது. இதனால் சருமம் மேலும் பாதிப்படையாமல் பாதுகாக்க முடியும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் ஸ்கிறப் செய்வது அவசியமானது.

4. நீர் அருந்துதல்.
சருமத்தின் வெலிப்புறம் மட்டுமன்றி உடலையும் ஈரப்பதமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானது. அதனால் அதிகளவான நீரை அருந்துவதை பழக்கப்படுத்திக் கொள்ளுவது அவசியமானது.

5. குளிரான நீரைப் பயன்படுத்தல்.
முகம் கழுவும் போது சூடான நீரைப் பயன்படுத்துவதனால் முகத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்த் தன்மை நீங்கி சருமம் உலர்வடைந்து விடும். அதனால் முகம் கழுவும் போது குளிரான நீரைப் பயன்படுத்துவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

6. ஈரப்பதமாக்கியைப் பயன்படுத்தல்:
குளிர் காலத்தில் வீட்டில் ஈரப்பதமாக்கியைப் பயன்படுத்துவதன் மூலம் சருமம் உலர்வடையாமல் ஈரப்பதத்தைப் பேண முடியும்.

7. பெட்ரோலியம் ஜெலி:
பெட்ரோலியம் ஜெலியை தினமும் இரவில் தூங்குவதற்கு முன் பூசி மசாஜ் செய்வதன் மூலம் சருமம் உலர்வடையாமல் பாதுகாக்க முடியும். பெட்ரோலியம் ஜெலி மிகச் சிறந்த தீர்வையும் தருகிறது.

8. பாதாம் எண்ணெய்.
பாதாம் எண்ணெய் சருமம் மற்றும் முடி பிரச்சினைகளிற்கு சிறந்த தீர்வைப் பெற்றுத் தரும். இதனை தினமும் இரவில் தடவி மசாஜ் செய்தல், அல்லது கற்றாளையுடன் சம அளவு கலந்து மசாஜ் செய்தல் என செய்து வருவதனால் ஈரப்பதத்தைப் பேண முடியும்.

9. ஜஸ் கட்டி:
மூக்குப் பகுதிகளில் ஜஸ் கட்டியை நேரடியாக வைப்பதன் மூலம் கடி மற்றும் சிவந்து போவதை தடுப்பதுடன், மேலும் சருமம் பாதிப்படையாமல் பாதுகாக்க முடியும்.

10. தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய்யை சருமத்தில் பூசுவதனால் இலகுவாக சருமத்தால் உறிஞ்சப்படுவதனால் உலர்வடைவதை தடுத்து ஈரப்பதத்தை பேணும். மேலும் கடிகளில் இருந்து சருமத்திற்கு தீர்வைத் தரும்.

11. நீண்ட நேரம் சவரில் குளித்தல்.
நீண்ட நேரம் சவரில் குளிப்பதனால் இயற்கையான எண்ணெய்த் தன்மை நீங்கி விடும். எனவே 10 முதல் 15 நிமிடங்களிற்கு மேல் சவரின் கீழ் நிற்பதை தவிர்த்தல் வேண்டும். – ©Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!