மூக்கு உலர்வடைவதைக் குணப்படுத்தும் இயற்கை முறைகள்..!


குளிர் காலத்தில் மூக்கின் இரு பகுதிகளிலும் மூக்கைச் சுற்றியும் சருமம் உலர்வடைந்து போதல், தோல் உரிதல் போன்றன பொதுவானதே. ஆனால் மூக்கு உலர்வடைந்து போவதற்கு குளிர்காலம் மட்டும் காரணம் கிடையாது. வேறு பல காரணங்களும் உள்ளன.

சில அழகுசாதனப் பொருட்கள், சோப் போன்றவற்றைப் பயன்படுத்துவதனால், வயதடைவதனால் செபேசியஸ் சுரப்பியில் ஏற்படும் மாற்றம், சில வகையான் மருந்துகள் உட்கொள்ளுதல், மேக்கப் போன்றவையும் அதற்கான காரணிகளே.

சில வேளைகளில் இந்தப் பிரச்சினை தொடர்ச்சியாக ஏற்படும். ஆனால் சருமப் பராமரிப்பில் அக்கறை செலுத்தினால் இதில் இருந்து நிரந்தரத் தீர்வைப் பெற முடியும். இதற்கு மருந்துகளை தேடுவதை விட்டு இயற்கை முறையில் தீர்வுகளைப் பெறலாம்.

மூக்கு உலர்வடைவதைக் குணப்படுத்தும் இயற்கை முறைகள் சில:

1. பெட்ரோலியம் ஜெலி.
தினமும் இரவில் தூங்குவதற்கு முன் பெட்ரோலியம் ஜெலியை மூக்கு மற்ரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவி மசாஜ் செய்வதனால் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும்.

2. பாதாம் எண்ணெய்.
பாதாம் சருமம் மற்றும் முடிக்கு பல நன்மைகளைச் செய்கிறது. அதனால் மூக்கு உலர்வடைவதற்கு பாதாம் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம் அத்துடன் கற்றாளையைச் சேர்த்துப் பயன்படுத்துவதனால் விரைவான தீர்வைப் பெற முடியும். சம அளவில் பாதாம் எண்ணெய், கற்றாளைச் சாற்றைச் சேர்த்து மூக்குப் பகுதிகளில் மசாஜ் செய்து கொள்ளவும்.

3. ஜஸ் ஒத்தடம்.
சருமம் உலர்வடைந்து போகும் போது வீக்கமும், அரிப்பும் ஏற்பட்டால் உடனடியாக ஜஸ் கட்டிகளால் ஒத்தடம் வழங்கும் போது விரைவான தீர்வைப் பெறுவதுடன் சருமம் மேலும் பாதிப்படையாமல் பாதுகாக்கும். ஜஸ்ஸை நேரடியாகவோ அல்லது துணியில் வைத்தோ தினமும் இரு தடவைகள் ஒத்தடம் வழங்குவது சிறந்தது.

4. தேங்காய் எண்ணெய்.
தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பமிலம் அதிகம் இருப்பதனால் சருமத்தால் விரவாக உறிஞ்சப்படுவதுடன், ஈரப்பதத்தை வழங்குகிறது. சருமம் சிவந்து போவதை உடனடியாக குணப்படுத்தி மென்மையாக மாற்றும் சக்தி தேங்காய் எண்ணெய்யிற்கு உள்ளது.

Sick woman wiping her nose

5. சவரில் நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்த்தல்.
நீண்ட நேரம் குளிப்பதனால் சருமத்தில் இயற்கையாக இருக்க வேண்டிய எண்ணெய்த் தன்மைகள் நீருடன் சென்று விடும். இதனால் சரும உலர்வு ஏற்படுவதை தவிர்ப்பதற்கு 15 நிமிடங்களிற்கு மேல் சவரில் நிற்பதைத் தவிர்க்கவும்.

6. இறந்த கலங்களை அகற்றுதல்.
வாரத்திற்கு 2 அல்லது 3 தடவைகள் ஸ்கிறப் பயன்படுத்துவதனால் இறந்த கலங்களை நீக்கி சருமத்தை ஈரலிப்பதமாக வைத்திருக்கும்.

7. நீர் அருந்துதல்.
சருமப் பகுதிகள் மட்டும் ஈரப்பதமாக இருந்தால் போதுமானதல்ல, உடலின் உட் பகுதியும் நீர்த் தன்மையுடன் இருப்பது அவசியமானது. அதனால் தினமும் அதிகளவு நீரை அருந்துவது சிறந்தது.

8. குளிரான நீரை பயன்படுத்தல்.
சூடான நீரைப் பயன்படுத்தி முகம் கழுவினால் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்த் தன்மைகள் முற்றாக நீங்கி விடும். எனவே சாதாரண நீரில் முகத்தைக் கழுவுவதனால் மூக்குப் பகுதி உலர்வடையாமல் ஈரப்பதமாக வைத்திருக்க முடியும்.

9. தேய்ப்பதைத் தவிர்த்தல்.
உலர்வடைந்த சருமப் பகுதிகளை தேய்ப்பதை தவிர்த்தல் அவசியமானது. ஏனெனில் சருமத்தை தேய்ப்பதனால் இரத்தக் கசிவுகள் ஏற்படலாம். எனவே அரிப்புக்கள் ஏற்படும் போது ஜஸ் கட்டிகளால் ஒத்தடம் வழங்குதல் மிகவும் சிறந்தது.

10. சிறந்த சன் கிறீம் பயன்படுத்தல்.
சன் கிறீமை பயன்படுத்தும் போது அல்ககோல் உள்ள சன் கிறீமைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து ஒலிவ் எண்ணெய் அல்லது கற்றாளையுள்ள சன் கிறீமைப் பயன்படுத்துவது சிறந்தது.

11. ஈரப்பதமாக்கியை பயன்படுத்தல்.
ஈரப்பதமாக்கியை வீட்டில் பயன்படுத்துவதனால் சருமம் உலர்வடையாமல் ஈரலிப்பாக இருப்பதற்கு உதவுகின்றது. – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!