சளியை முற்றாக நீக்கி இருமலை குணப்படுத்த இதோ எளிய 7 வீட்டு வைத்திய முறைகள்..!


இயற்கையிலேயே மிகவும் விந்தையானது மனித உடல். இது தனக்குத் தேவையான செயற்பாடுகளை தானே செய்து கொள்வதுடன், அதில் ஏற்படும் கோளாறுகளையும் தானாகவே சரி செய்து கொள்கின்றது. அதில் ஒன்று தான் இந்த இருமலும்.

இருமல் என்பது நமது சுவாசக் குழாயில் உள்ள மாசுக்களையும், சளியையும் வெளியேற்றும் முக்கிய செயற்பாட்டை செய்து வருகின்றது.

சுவாசக் குழாய்களில் எதாவது அடைப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதியில் உள்ள நரம்புகல் மூளைக்குச் செய்தியை அனுப்பி விடும். மூளை உடனடியாக இதய தசைகளை சுருங்கச் செய்து வளியுடன் அவற்றை வெளியேற்றி விடும்.

இருமலை ஏற்படுத்தும் முக்கிய காரணிகள், மாசுக்கள், தூசு, புகை, இரசாயணப் பொருட்கள், மற்றும் அதிகமாக சளி பிடித்தல் போன்றவையே.

இருமல் சுவாசக் குழாயை இயற்கையாகவே சுத்தப்படுத்தும் ஒரு செயற்பாடு. பொதுவாக 3 நாட்கள் வரை இருமல் இருந்தால் மருத்துவ சிகிச்சை தேவையில்லை. ஆனால் அதற்கு மேல் இருமல் தொடருமாக இருந்தால் வீட்டு வைத்திய முறையில் சளியை முற்றாக நீக்கி இருமலைக் குணப்படுத்த வேண்டும்.

இருமலைப் போக்குவதற்கான இலகுவான 7 வழிகள்.

1. மிளகும் மஞ்சளும்.
மிளகும் மஞ்சளும் சிறந்த இயற்கைத் தீர்வைத் தரும் பொருட்கள். மஞ்சள் சளியை வெளியேற்ற உதவுவதுடன், மிளகு அதற்கு தூண்டுதலாகச் செயற்படும். இவை இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்துவதனால் தொண்டையில் இருந்து இலகுவாக சளியை வெளியேற்ற முடியும். இதில் தேனைக் கலப்பதனால் மேலும் விரைவான தீர்வைப் பெற முடியும்.
சேர்மானங்கள்:

• ¼ தேக்கரண்டி மஞ்சள் பவுடர்.
• 3-4 மிளகு.
• 1 தேக்கரண்டி தேன்.
• 2 கப் நீர்.

செய்முறை:
2 கப் நீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து, அதில் மஞ்சள் பவுடரும், மிளகைச் சேர்த்து நீரின் அளவு பாதியாகக் குறையும் வரை நன்றாகச் சூடாக்கவும். அதனை சளி குறையும் வரை தினமும் 2 தடவைகள் குடிக்கவும்.

2. இஞ்சி தேன் கலந்த தேநீர்
நம் முன்னோர் காலத்தில் இருந்து பயன்படுத்திய மூலிகை மருந்து இஞ்சி தேன் கலந்த தேநீர்.
தேவையான பொருட்கள்.
• 4-5 உடன் வெட்டப்பட்ட இஞ்சித் துண்டு.
• 1 மேசைக்கரண்டி தேன்.
• 3-4 துளி எலுமிச்சை
• 1 கப் நீர்.

செய்முறை:
நீரில் இஞ்சியைப் போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்பு இஞ்சிச் சாறு உள்ள நீரில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து குடிக்கவும். இதனை தினமும் இரு தடவைகள் குடிப்பது சிறந்தது.
3. புதினா எண்ணெய் நீராவி.
புதினா மூக்கடைப்பை எவ்வாறு நீக்குகிறதோ, அவ்வாறு இருமலையும் குணப்படுத்தும் வல்லமையும் உள்ளது.

தேவையானவை:
• 150 மில்லி லீட்டர் நீர்.
• புதினா எண்ணெய் சிறிதளவு.
• சுத்தமான துவாய்.


செய்முறை:
கொதித்த நீரில் புதினா எண்ணெய் சிறிதளவு சேர்த்து, தலைப் பகுதியை துவாயினால் மூடி மூச்சை இழுத்து விட்டு ஆவி பிடிக்கவும்.

4. வெங்காயம்.
வெங்காயத்தின் வாசனை இருமலில் இருந்து உடனடியான தீர்வைத் தருவதுடன் மூச்சுக் குழாயை சுத்தப்படுத்தவும் செய்கிறது.
தேவையானவை:
• 1 வெங்காயம்.
• 1 தேக்கரண்டி தேன்.

செய்முறை:
வெங்காயத்தை சிறிதாக வெட்டி பிளண்டரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். ¼ தேக்கரண்டி வெங்காயச் சாறுட, 1 தேக்கரண்டி தேன் கலந்து தினமும் ஒரு தடவை குடிப்பது சிறந்தது.

5. வெள்ளைப் பூடு.
இஞ்சி மூச்சுக் குழாயில் உள்ள சளியை வெளியேற்றும். அத்துடன் நுண்ணங்கித் தொற்றுக்களில் இருந்தும் தீர்வைத் தரும்.

தேவையானவை:
• 2-3 வெள்ளைப் பூடு.
• சில துளி கராம்பு எண்ணெய்.
• ஒரு தேக்கரண்டி தேன்.

செய்முறை:
நீரில் பூண்டைப் போட்டு கொதிக்க வைத்து அதில் கராம்பு எண்ணெய்யும், தேனும் கலந்து தினமும் இரு தடவைகள் குடிக்கவும்.

6. சோம்பு மற்றும் துளசி:
சோம்பு மற்றும் துளசி சுவாசக் குழாயில் உள்ள சளியை நீக்கி இருமலைக் குணப்படுத்தும்.

தேவையானவை:
• 2-3 சோம்பு.
• 4-5 உடன் பறிக்கப்பட்ட துளசி இலை.
செய்முறை:
நீரில் சோம்பு மற்றும் துளசி இலையைப் போட்டு கொதிக்க வைக்கவும். அந்த நீரை இருமல் குறையும் வரை தினமும் குடிக்கவும்.

7. பாதாம்:
பாதாம் ஊட்டச்சத்து நிறைந்த உணவு. இது தொற்றுக்களை நீக்குவதன் மூலம் இருமலைக் குணப்படுத்தும்.

தேவையானவை:
• 4-5 ஊற வைத்த பாதாம்.
• ஒரு தேக்கரண்டி தேன்.
செய்முறை:
ஊற வைத்த பாதாமை மசித்து, அந்த பசையில் தேனைக் கலந்து தினமும் மூன்று தடவைகள் சாப்பிடுவதனால் சளி குறைவடையும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!